கிவி பழத்தை விட 3 மடங்கு வைட்டமின் சி... இந்தக் காயில் இப்படி துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!
"ஒரு கிவி பழத்தையும் ஒரு நெல்லிக்காயையும் ஒப்பீடு செய்து பாருங்கள். ஒரு கிவி பழத்தின் விலை ரூ.60. கிவி பழத்தை விட நெல்லிக்காயில் 3 மடங்கு அதிக வைட்டமின் சி இருக்கிறது." என்று சித்து மருத்துவர் சிவராமன் கூறுகிறார்
ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ள நெல்லிக்காயில் சுவையான துவையல் எப்படி தயார் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம்.
சித்து மருத்துவர் சிவராமன் யூடியூப் வீடியோ ஒன்றில் நெல்லிக்காயின் பயன்கள் பற்றி பேசுகிறார். அதில் அவர் கூறும்போது, "ஒரு பொருள் இரண்டு ஆயிரம் வருடமாக பேசு பொருளாக இருக்கிறது என்றால், அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பொருளாக இருக்கும். அந்த வகையில், எல்லோருடைய வீட்டிலும் இருக்க வேண்டிய பொருள் நெல்லிக்காய்.
Advertisment
ஒரு கிவி பழத்தையும் ஒரு நெல்லிக்காயையும் ஒப்பீடு செய்து பாருங்கள். ஒரு கிவி பழத்தின் விலை ரூ.60. அதனை வாங்கி சாலட் போட்டு பெருமை பேச வேண்டாம். கிவி பழத்தை விட நெல்லிக்காயில் 3 மடங்கு அதிக வைட்டமின் சி இருக்கிறது. கிவி பழத்தில் இல்லாத பல பைட்டோ கெமிக்கல்கள் இருக்கிறது" என்கிறார்.
பைட்டோ கெமிக்கல் என்றால் என்ன?
பைட்டோ கெமிக்கல் எனப்படும் தாவர ரசாயனங்கள் தாவரங்களால் உற்பத்தி செய்யப்படும் ரசாயன கலவைகள் ஆகும். பொதுவாக அவை பூஞ்சை, பாக்டீரியா மற்றும் தாவர வைரஸ் தொற்றுகளை எதிர்க்க உதவுகின்றன.
Advertisment
Advertisements
அந்த வகையில், ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ள நெல்லிக்காயில் சுவையான துவையல் எப்படி தயார் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம்.
நெல்லிக்காய் துவையல் - தேவையான பொருட்கள்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன் கடலைப் பருப்பு - 1 ஸ்பூன் வரமிளகாய் - 2 பூண்டு - 5 பல் வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 1 நெல்லி -2 புளி - சிறிதளவு தேங்காய் - சிறிதளவு உப்பு - தேவையான அளவு
நீங்கள் செய்ய வேண்டியவை
முதலில் இரண்டு நெல்லிக்காய்களை எடுத்து அதனை தண்ணீரில் போட்டு நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும். இதன்பிறகு, தன்னை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
இதன்பின்னர், ஒரு கடாய் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். அவை சூடானதும் அதனுடன் உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வர மிளகாய், பூண்டு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
தொடர்ந்து, நறுக்கி வைத்துள்ள நெல்லி, புளி, தேங்காய், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். இவற்றை அப்படியே மிக்சியில் போட்டு அரைத்து எடுக்கவும். இவற்றுடன் வர மிளகாய், கருவேப்பிலை சேர்த்த தாளிப்பு சேர்த்து விட்டால் ருசியான நெல்லிக்காய் துவையல் ரெடி.