கால் பாதம் எரிச்சல் சுகர், பிபி இருக்கும் நபர்களுக்கு ஆரம்ப அறிகுறியாக உள்ளது. அதனால், இந்த பிரச்னைக்கான காரணம் என்ன என்று தெரிந்துகொண்டு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும், அதனுடன் இந்த உணவுகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் ஹெல்தி தமிழ் யூடியூப் பக்கத்தில் மருத்துவர் சிவராமன் கூறியிருப்பதாவது,
உள்ளங்கையில், உள்ளங்காலில் வரக்கூடிய சின்ன எரிச்சல், நிறைய பேருக்கு இளம் வயதில் வரவே வராது. பெரும்பாலும் இந்த பிரச்சனை 45 வயதுக்கு மேல் 55 வயதுக்கு மேல் இந்த பிரச்சனை சின்ன சின்னதாக அங்கங்க வரும்.
இந்த பிரச்னை எல்லாமே கால் கைப்பகுதியில் இருக்கக்கூடிய புற நரம்புகள் அவற்றினுடைய வலு இழப்பை தான் சொல்கின்றன. ஆங்கிலத்தில் பெரிஃபரல் நியூரைட்டீஸ் என்று சொல்வார்கள்.
பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகளுக்குதானந்த பெரிஃபரல் நியூரைட்டீஸ் என்கிற பிரச்னை வரும். நாள்பட்ட சர்க்கரை நோயாளிகள் எப்போதுமே கால்களில் மெண்மையான செருப்பு அணிவதை உறுதியாக செய்ய வேண்டும்.
சிலருக்கு சர்க்கரை நோயும் இல்லை, ரத்தக் கொதிப்பும் இல்லை, ஆனால், கை, கால்களில் பாதத்தில் எரிச்சல் இருக்கிறது என்றால், விட்டமின் பி12 பற்றாக்குறைகூட ஒரு முக்கியமான காரணமாக இருக்கும். அதேபோல சித்த மருத்துவத்தில் கிராம்புவில் அமுக்கரா கிழங்குகள் போட்டு ஒரு சூரணம் செய்வார்கள். சித்த மருத்துவர்கள் இப்படி ஒரு பொடி செய்வார்கள்.
இந்த கிராம்பு சூரணம், கரபாதசூளை என்று சொல்லக்கூடிய பெரிஃபரல் நரம்பு பிரச்னையை நீக்கி எரிச்சல் வரத் தன்மையைப் போக்கும் என்று பல ஆய்வுகள் உறுதிப்படுத்தி இருக்கின்றன. அதனால், பெரிஃபரல் நோய்க்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு, அந்த பெரிஃபரல் நரம்புகளை வலுப்படுத்தக்கூடிய இந்த உணவுகளை எடுத்துக்கொண்டால், இந்த பிரச்னை பின்னாளில் ஒரு பெரிய நோயாக உருவெடுக்காது என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
கால் எரிச்சல் குணமாக இயற்கை வீட்டு வைத்தியம்
முக்கியமாக சாப்பிட வேண்டிய உணவுகள்: நிறைய கீரை வகைகளை சாப்பிட வேண்டும்.அனைத்து வகையான கீரைகளையும் எடுத்து கொள்ளலாம்.
மசாலாக்கள் லவங்கம், வெந்தயம், கருவேப்பிலை, கொத்தமல்லி,சின்ன வெங்காயம் ஆகியவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். குறிப்பாக சின்ன வெங்காயத்தை அப்படியே பச்சையாக எடுத்து கொள்ளலாம்.
கீரை என்று கூறும்போது வெந்தய கீரையை அதிகம் சாப்பிடலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.