சண்டே ஸ்பெஷல் நெத்திலி மீன் குழம்பு எல்லோருக்கும் பிடித்த மாதிரி புளி கரைத்து ஊற்றி எப்படி செய்வது என்று பார்ப்போம். வெறும் 45 நிமிடத்தில் சுவையான நெத்திலி மீன் குழம்பு செய்து விடலாம். ஹோம் குக்கிங் யூடியூப் பக்கத்தில் சுவையான நெத்திலி மீன் குழம்பு செய்து காட்டியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
தேங்காய்
சீரகம்
நெத்திலி மீன்
தேங்காய் எண்ணெய்
கடுகு
வெந்தயம்
சிறிய வெங்காயம்
பச்சை மிளகாய்
இஞ்சி பூண்டு விழுது
தக்காளி
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
மல்லித்தூள்
புளிக்கரைசல்
கறிவேப்பிலை
உப்பு
செய்முறை
முதலில் துருவிய தேங்காய், சீரகம், தண்ணீர் சேர்த்து அரைத்து அரைத்துக்கொள்ளவும். அடுத்தது ஒரு மண் சட்டியில் தேங்காய் எண்ணைய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், பொடியாக நறுக்கிய சிறிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானவுடன் இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். இதில் புளிக்கரைசல், தேவையான அளவு தண்ணீர், அரைத்த தேங்காய் மசாலா விழுது, கறிவேப்பிலை சேர்த்து மூடிய நிலையில் பத்து நிமிடத்திற்கு கொதிக்க விடவும்.
நெத்திலி மீன் குழம்பு | Nethili Fish Curry Recipe in Tamil
குழம்பு கொதித்ததும் சுத்தம் செய்த நெத்திலி மீனை சேர்க்கவும். நெத்திலி மீனை கரண்டியை வைத்து கிளறாமல் மண் சட்டியை மெதுவாக தூக்கி அசைத்து கலக்கவும். அப்போதான் மீன் உடையாமல் முழுதாக இருக்கும்.
பின்னர் 5 நிமிடம் மூடி போட்டு ஒரு கொதி விட்டு இறக்கினால் அவ்வளவு தான் சுவையான நெத்திலி மீன் குழம்பு தயார்.