scorecardresearch

30 நிமிடங்கள் உட்கார்ந்த பிறகு 3 நிமிட நடை: ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த புதிய டெக்னிக்

அரை மணி நேரம் உட்கார்ந்து இருந்துவிட்டு, இடையே 3 நிமிடங்கள் வரை நடந்தால், சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ள முடியும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இது டைப் 2 சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு நன்றாக வேலை செய்வதாக கூறப்படுகிறது.

30 நிமிடங்கள் உட்கார்ந்த பிறகு 3 நிமிட நடை
30 நிமிடங்கள் உட்கார்ந்த பிறகு 3 நிமிட நடை

அரை மணி நேரம் உட்கார்ந்து இருந்துவிட்டு, இடையே 3 நிமிடங்கள் வரை நடந்தால், சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ள முடியும் என்று  ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இது டைப் 2 சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு நன்றாக வேலை செய்வதாக கூறப்படுகிறது.

லண்டனில் நடைபெற்ற ஆய்வில், டைப் 1 சர்க்கரை நோய் பாதிக்கப்பட்ட 32 நபர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. குறிப்பாக தொடர்ந்து உடல் பயிற்சி செய்யாமல் உட்கார்ந்துகொண்டே வேலை செய்பவர்கள், வேலைக்கு இடையே 3 நிமிடங்கள் நடைபயிற்சி செய்ய வைத்தனர். இந்நிலையில் இப்படி செய்யும்போது அவர்களின் ரத்த சர்க்கரை அளவு சீராக இருந்தது. இந்நிலையில் மேலும் அவர்களுக்கு சர்க்கரை அளவு குறைவாக சென்று தலை சுற்றல்  ( low sugar)  ஏற்படும் வாய்ப்புகளும் குறைவாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 30 நிமிடங்கள் தொடர்ந்து உட்கார்ந்து வேலை செய்துவிட்டு, இருக்கும் இடத்தில் 3 நிமிடங்கள் அவர்கள் நடக்கவைக்கப்பட்டனர். இந்நிலையில் தினமும் 30 நிமிடங்கள் நடைபயிற்சி அல்லது ஓட முடியாத நபர்கள். இந்த வழிமுறையை செய்யலாம். எல்லா அரை மணி நேரத்திற்கும் ஒரு முறை 3 நிமிடங்கள் நடக்க வேண்டும். இது  தொடர்ந்து செய்யும்போது ரத்த சர்க்கரை அளவு சீராக இருப்பதோடு, குறைந்த சர்க்கரை அளவால் ஏற்படும் தலை சுற்றலும் குறைகிறது.

தற்போதைய தொழில்நுட்பத்தின் மூலமாக உங்களது ரத்த குளுக்கோஸ் அளவை, நீங்கள் கண்கானிக்க முடியும். இதனால் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை 3 நிமிடங்களை நடக்கும் புதிய முறையை செயல்படுத்த முடியும்.

இதனால்தான் ஆய்வாளர்கள், சாப்பிட்ட பின்பு சிறிது நடப்பதால், ரத்த குளுக்கோஸ் அளவு குறைகிறது என்று கூறுகிறார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: New blood sugar control method works walk for 3 minutes sit for 30 walk for 3 minutes again

Best of Express