வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் புதிய உணவு எப்படி செய்வது என இப்பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
எண்ணெய்
கால் டீஸ்பூன் கடுகு
ஒரு பெரிய வெங்காயம்
ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை
பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி
தேவையான அளவு உப்பு
முக்கால் டீஸ்பூன் மிளகாய் தூள்
கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்
அரை டீஸ்பூன் கரம் மசாலா தூள்
கால் கப் தேங்காய் துறுவல்
ஒரு கப் கோதுமை மாவு
அரை கப் தண்ணீர்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், தேங்காய் துறுவல் ஆகியவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். பின்னர், கோதுமை மாவு, உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைய வேண்டும். இவற்றை சிறிய உருண்டைகளாக உருட்டி, அதை தேய்த்து, அதற்குள் முதலில் செய்த மசாலாவை சேர்த்து மூடிக் கொள்ள வேண்டும். பின்னர், மற்றொரு பாத்திரத்தில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி இதனை பொன்னிறமாக மாறும் வரை பொறித்து எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சுவையான உணவு தயராகி விடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“