பூண்டு, தக்காளி, மிளகாய் சேர்த்து காரசாரமான சுவையான சட்னி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பூண்டு – 5
மிளகாய் – 7
புளி – சிறிதளவு
சின்ன வெங்காயம் – 10
கடுகு – சிறிதளவு
தக்காளி – 1
கறிவேப்பிலை – 1 கொத்து
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அடுத்து மிக்சி ஜாரில் 5 பல் பூண்டு, மிளகாய் 7 சேர்த்து அரைத்து பின்னர் புளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கொஞ்சம் கொரகொரப்பாக இருக்கும். அதனுடன் 10 சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
இப்போது அதே மிக்சி ஜாரில் தக்காளி 1 மட்டும் சேர்த்து அரைக்கவும். அடுத்து அடுப்பில் கடாய் வைத்து நல்லெண்ணைய் ஊற்றி அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அடுத்து அரைத்து வைத்துள்ள மிளகாயை சேர்த்து வதக்கவும். அதன் பிறகு தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இந்த சட்னி கொஞ்சம் தண்ணீர் போல் இருந்தால் தான் நன்றாக இருக்கும். எனவே அதில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். அவ்வளவு தான் கொதிக்க வைத்து எடுத்தால் இட்லி, தோசைக்கு சுவை அள்ளும் சட்னி ரெடி.