வெல்லம் கொண்டு செய்யப்படும் இந்த தோசையை ஒரு முறை செய்ஞ்சு பாருங்க. இந்த தோசை உடலை இயக்க அதிக சக்தி தரும்.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு
அரிசி மாவு
தேங்காய் துருவல்
வெல்லம் – தூளாக்கியது
ஏலக்காய் தூள்
துருவிய முந்திரி
நெய்
செய்முறை:
வெல்லத்தில் 2 கப் தண்ணீர் விட்டு லேசாகக் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துகொள்ளுங்கள், பாகு ஆறியதும் அதில் கேழ்வரகு மாவு, அரிசிமாவு, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், முந்திரி துருவல் எல்லாவற்றை சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்க வேண்டும். தொடர்ந்து நெய் ஊற்றி தோசை சுட வேண்டும்.