இரண்டு நாள்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும் புதிய சைடிஷ் செய்முறையை இப்பதிவில் காணலாம். வேர்க்கடலை, வெண்டைக்காய் சேர்த்து செய்யப்படும் சைடிஷ் புதிய சுவையை கொடுக்கும் வகையில் அமைந்திருக்கும்.
வெண்டைக்காய், வேர்க்கடலை ஆகியவை சேர்த்து புதிய சைடிஷ் எப்படி செய்வது என இப்பதிவில் காணலாம். இதனை இரண்டு நாள்கள் வரை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தேவையான பொருள்கள்:
அரை கப் வேர்க்கடலை
3 பூண்டுகள்
எண்ணெய்
1/4 டீஸ்பூன் வெந்தயம்
1/4 டீஸ்பூன் கடுகு
ஒரு டீஸ்பூன் சீரகம்
ஒரு டீஸ்பூன் மல்லி விதை
15 வரமிளகாய்
கறிவேப்பிலை
250 கிராம் வெண்டைக்காய்
2 சின்ன தக்காளி
புளி
செய்முறை:
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சூடுபடுத்தி அதில் அரை கப் வேர்க்கடலை, 3 பூண்டு சேர்த்து வறுக்க வேண்டும். பின்னர் இவற்றை ஆறவைக்க வேண்டும். இதையடுத்து, அதே பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வெந்தயம், கடுகு, சீரகம், மல்லி விதை, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வறுக்க வேண்டும். இவற்றையும் தனியாக ஆற வைக்க வேண்டும். மீண்டும் பாத்திரத்தில் 250 கிராம் வெண்டைக்காய், தக்காளி, எலுமிச்சை அளவில் புளி சேர்த்து வதக்க வேண்டும். இதனை, இதற்கு முன்னதாக வறுத்த கலவையுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். அதன் பின்னர், இதனுடன் அரைத்த வேர்க்கடலையும் சேர்த்து மீண்டும் அரைக்க வேண்டும். இறுதியாக, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, ஒரு வரமிளகாயை எண்ணெய்யில் தாளித்து ஊற்ற வேண்டும். இதனை இரண்டு நாள்கள் வரை சாப்பாடு, சப்பாத்தி ஆகியவற்றுடன் சைடிஷாக சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“