scorecardresearch

வழக்கமான தோசை சாப்பிட்டு  சலிப்பா இருக்கா ?  இந்த அடையை டிரை பண்ணுங்க

பரங்கிக்காய் அடையை மிகவும் சுலபமாக செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

வழக்கமான தோசை சாப்பிட்டு  சலிப்பா இருக்கா ?  இந்த அடையை டிரை பண்ணுங்க

பரங்கிக்காய் அடையை மிகவும் சுலபமாக செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

புழுங்கலரிசி

உளுந்தம்பருப்பு

துவரம்பருப்பு

பாசிப்பருப்பு

காய்ந்த மிளகாய்

சோம்பு

பெருங்காயம்

சின்ன வெங்காயம்

 உப்பு

மல்லித்தழை

எண்ணெய்

பரங்கிக்காய்

செய்முறை:

பரங்கிக்காய் தோல் சீவி, துருவிக்கொள்ளவும். அரிசியைத் தனியாகவும், பருப்புகளைத் தனித்தனியாகவும் ஊற வைக்கவும்.  மிளகாயை தண்ணீரில் ஊற வைக்கவும். 2 மணி நேரம் கழித்து  சோம்பு,  மிளகாய்,  உப்பு, வெங்காயம் மற்றும் பெருங்காயத்தை விழுதாக அரைத்தெடுக்கவும். மிக்ஸியில் முதலில் உளுந்தம் பருப்பை போட்டு அரைத்தவுடன் அரிசியை போட்டு அரைக்கவும். பாசிப்பருப்பை ஒரு சில விநாடிகள் மட்டும் அரக்கவும்.  துவரம்பருப்பையும் ஒன்றிரண்டாக அரைத்தெடுத்து, அனைத்தையும் அரைத்த மிளகாய் விழுதுடன் ஒன்றாக கலந்து அதில் மல்லித்தழையை கலக்கவும்.  பின்னர் தோசைக் கல்லை சுட வைத்து எண்ணெய் விட்டு மெலிதாக அட்டையை சுட்டு எடுக்கவும்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: New type adai recipe for healthy life

Best of Express