புத்தாண்டில் வீட்டிலேயே ஒரு சூப்பரான ஸ்வீட் செய்வது எப்படி என்று நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம். வீட்டில் இருக்கும் கொஞ்சம் பொருட்களை வைத்தே இந்த ஸ்வீட்ட் செய்யலாம். புசுபுசுன்னு நாக்கில் வைத்தாலே அப்படியே கரைந்துவிடும். இந்த ஸ்ஸ்வீட் செய்வது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்.
இந்த புத்தாண்டில் வீட்டிலேயே தேங்காய் பால் ஸ்வீட் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேங்காய் பால் ஸ்வீட் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறையை இங்கே தருகிறோம்.
முதலில் ஸ்டவ்வைப் பற்ற வைத்து ஒரு வானலியை எடுத்து வையுங்கள். ஒரு கப் வெல்லம் அதாவது 250 கிராம் வெல்லம் வானலியில் போடுங்கள். அதில் கால் கப் தேங்காய் தண்ணீர் ஊற்றுங்கள். நன்றாகக் கலந்துவிடுங்கள். வெல்லம் கரைந்து நன்றாகக் கொதித்து நுரை கட்டி வந்ததும் ஸ்டவ்வை நிறுத்திவிடுங்கள். இதை எடுத்து ஒரு ஓரமாக வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது ஸ்வீட் செய்ய ஒரு கனமான கடாய் எடுத்துக்கொள்ளுங்கள். அதை ஸ்டவ்வில் வைத்து சூடு படுத்துங்கள். கடாய் சூடானதும் அதில், 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றுங்கள். நெய் சூடானதும், ஸ்டவ்வில் தீயைக் குறைத்து வைத்துக்கொண்டு, சலித்த 150 கிராம் கடலை மாவு கடாயில் போட்டு கருகாமல் மணம் வரும் வரை வருத்துக்கொள்ளுங்கள். அதில், ஏற்கெனவே தயார் செய்து வைத்திருக்கும் வெல்லத்தை வடிகட்டி ஊற்றுங்கள். மிதமான தீயில் சூடு படுத்துங்கள், ஓரளவு கெட்டியானவுடன், அதில் ஒரு நல்ல தேங்காயை அரைத்து அதில் இருந்து 1 1/2 கப் தேங்காய் பால் எடுத்து ஊற்றுங்கள். நன்றாகக் கிளறிவிடுங்கள். லேசாக கெட்டியானதும் 1 டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி நன்றாகக் கிளறிவிடுங்கள். கெட்டியாக வரும்போது மேலும் ஒரு 1 டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி நன்றாகக் கிளறிவிடுங்கள். அதனுடன் அரை ஸ்பூன் ஏலக்காய் போட்டு கிளறிவிடுங்கள். அல்வா போல கெட்டி பதம் வந்த உடன் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான், புசுபுசுன்னு நாக்கில் வைத்தாலே கரையும் தேங்காய் பால் ஸ்வீட் தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“