ஒரு முறை, இப்படி பொட்டுக்கடலை மாவில் வடை செய்து பாருங்க . செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
பொட்டுக்கடலை – 1 கப்
பச்சரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
பெருங்காயம் – அரை டீஸ்பூன்
உப்பு
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை : முதலில் பொட்டுக்கடலை மிக்ஸியில் நன்றாக பொடியாக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் இந்த மாவை சேர்த்து, அரிசி மாவு சேர்க்கவும். நறுக்கிய வெங்காயத்தை, பச்சை மிளகாய் சேர்க்கவும். உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, தண்ணீர் சேர்க்கவும். தொடர்ந்து உப்பு சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ளவும். இதை வடை போல் தட்டி கொள்ளம். சூடன எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“