scorecardresearch

சென்னையில் 9 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை: இதுதான் காரணமா?

கொச்சியில் இருந்து வந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்னையில் உள்ள, 9 இடங்களில் நேற்று சோதனை செய்தனர்.

NIA

கொச்சியில் இருந்து வந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்னையில் உள்ள, 9 இடங்களில் நேற்று சோதனை செய்தனர்.

கேரளாவில் போதை மருத்து மற்றும் ஆயுதங்களை  கடத்திய வழக்கில் கேரள என்.ஐ. ஏ அதிகாரிகள் சென்னையில் உள்ள 9 இடங்களில் சோதனை நடத்தினர்.

இலங்கை நாட்டை சேர்ந்த ஒருவர் தமிழகத்தில் போதை பொருள் கடத்தல்,  ஆயுதங்களை விற்பனை செய்யும் வழக்கில் கைது செய்யப்பட்டார். தடைசெய்யப்பட்ட எல்.டி.டி.இ அமைப்பை மீண்டும் உருவாக்கவும், இந்த நபர் முயற்சிகள் எடுத்ததால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இவர் தொடர்புடைய நபர்களை கண்டறிய சென்னையில் 9 இடங்களில் சோதனை நடைபெற்றது.

இந்நிலையில் இந்த சோதனையின்போது, என்.ஐ .ஏ அதிகாரிகள் தங்கம் மற்றும் பணத்தை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விசாரணையில் ஒருவர் கைதானதாக கூறப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Nia raids 9 places in chennai

Best of Express