இரவு டின்னருக்கு லைட்டான அடை செய்யுங்க: ரொம்பவே ஈசி ரெசிபி

இரவில் இப்படி எளிமையா அடை செய்து சாப்பிட்டால் உடலுக்கு ரொம்பவே நல்லது .

இரவில் இப்படி எளிமையா அடை செய்து சாப்பிட்டால் உடலுக்கு ரொம்பவே நல்லது .

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa

இரவில் இப்படி எளிமையா அடை செய்து சாப்பிட்டால் உடலுக்கு ரொம்பவே நல்லது 
தேவையான பொருட்கள் 
இட்லி அரிசி – 1 கப்
பச்சரிசி – 1/2 கப்
கருப்பு உளுந்து– 1/4 கப்
மிளகுத் தூள் – 3 டீஸ்பூன்
வெங்காயம் – 1 கப்
கறிவேப்பிலை – 20 இலைகள்
தேங்காய்த் துருவல் – 1 கப்
தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு 

Advertisment

செய்முறை 

இட்லி அரிசி, பச்சரிசி மற்றும் கருப்பு உளுந்தம் பருப்பை எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் உளுந்தைச் சேர்த்து கழுவி, 2 மணி நேரம் ஊறவைக்கவும். பின் தண்ணீரை வடிகட்டவும். மிக்ஸி ஜாரில் வடிகட்டிய அரிசி மற்றும் உளுந்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றவும். மேலும் 1.5 கப் தண்ணீர் விட்டு கலக்கவும். அரைத்த மாவில் உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும். 

இப்போது தோசைக் கல் அடுப்பில் வைத்து சூடானதும் தயாரித்து வைத்த மாவில் தோசை ஊற்றவும். எண்ணெய் சுற்றி ஊற்றி வேக வைத்து பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால் சுவையான மிளகு அடை தோசை ரெடி. 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: