தென்னிந்திய உணவு வகைகளில் புளித்த மாவிலிருந்து தயாரிக்கப்படும் பிரபலமான அப்பம், கேரள உணவு வகைகளில் ஒரு முக்கிய அங்கமாகும். இதி செய்ய அரிசி மாவு, தேங்காய், புழுங்கல் அரிசி மற்றும் தயிர் ஆகியவை தேவை. இதை மிகவும் சுவையாக எப்படி செய்வது என்று யூகே சோழன் தமிழன் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 250 கிராம்
புழுங்கல் அரிசி - 50 கிராம்
பெரிய தேங்காய் - 50 கிராம்
அவல் - 20 கிராம்
தயிர் - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
உப்பு
ஈஸ்ட் - 1/2 டீஸ்பூன்
செய்முறை
மேற்குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் செர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்து எடுக்கவும். பின்னர் இதை ஒரு பவுலில் மாற்றி ஒரு அரை மணி நேரம் அரை வெப்பத்தில் வைத்து புளிக்க வைக்கவும்.
5 நிமிடத்தில் ஆப்பம் மாவு ரெடி
மாவு புளித்து வந்ததும் அதை ஆப்பச்சட்டியில் ஊற்றி ஆப்பம் சுடலாம். இதற்கு தேங்காய் பால் அல்லது ஆட்டுக்கால் பாயா செய்து சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.
தேங்காய் பால் செய்ய தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல்
ஏலக்காய்
சுக்கு தூள்
நாட்டுச்சர்க்கரை
செய்முறை
தேங்காய் துருவல், ஏலக்காய், நாட்டு சர்க்கரை, சுக்கு தூள் சேர்த்து நன்றாக அரைத்து அதை வடிகட்டி வைக்கவும். இதில் தேவைப்பட்டால் பசும் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கினால் தேங்காய் பால் ரெடி.
இப்போது இது இரண்டையும் சேர்த்து சாப்பிடலாம். இதய நலத்திற்கும், வயிறு புண் குணமாகும்.