பொங்கலோ பொங்கல் அப்படி உங்கள் வீடுகளில் பொங்கல் சுவையாக வைக்க வேண்டும். அதற்கு அல்வா மாதிரி தான் பொங்கல் செய்ய வேண்டும். பாசிப்பருப்பு இல்லாமல் அல்வா மாதிரி வாயில் வைத்ததும் கரைகிற மாதிரி சர்க்கரை பொங்கல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பச்சை அரிசி
வெல்லம்
நெய்
முந்திரி
திராட்சை
ஏலக்காய்
பச்சை கற்பூரம்
நீங்கள் எப்போதும் வீட்டில் சமைக்கும் அளவு முறையையே இதற்கும் பயன்படுத்தலாம்.
செய்முறை
தேவையான அளவு பச்சரிசி எடுத்து நன்கு கழுவி ஒரு குக்கரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
பின்னர் இடித்த வெல்ல்த்தை எடுத்து தண்ணீர் ஊற்றி வெல்ல கரைசலாக எடுத்துக் கொள்ளவும். இதற்கு பதம் தேவையில்லை.கொதித்து வந்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் குக்கர் விசில் வந்து சாதம் நன்கு வெந்து வந்ததும் அதை கரண்டியை வைத்து நன்கு மசிய வைக்கவும். மிதமான சூட்டிலேயே குக்கரை வைத்து அதில் கரைத்து வைத்துள்ள வெல்ல கரைசலை சேர்த்து நன்கு கலந்த விடவும்.
அல்வா மாதிரி சக்கரை பொங்கல் & புசு புசுன்னு உளுந்து வடை | Sakkarai Pongal Recipe |Medu Vada Recipe
பின்னர் ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி பருப்பு நன்கு வறுக்கவும். அது நன்கு வாசனை வந்ததும் அதில் திராட்சை பழத்தையும் போடவும். திராட்சை பழம் நன்கு பொரிந்து பழுத்து வரும் போது அதை எடுத்து பொங்கலில் சேர்த்து கலந்து விட்டு தண்ணீர் வற்றவிடவும்.
இதில் சிறிது பச்சை கற்பூரம், இடித்த ஏலக்காய் தூள், சிறிது உப்பு இவற்றையும் சேர்த்து நன்கு கலந்து விட்டு ஒரு ஐந்து நிமிடம் மூடி வைத்துவிட்டு பின்னர் எடுத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். அல்வா மாதிரி கரண்டியில் ஒட்டாமல் வரும் பதத்தில் இருக்க வேண்டும்.