கிறிஸ்துமஸ் பண்டிக்கை வரப்போகிறது. அதனால் அனைவரும் கூகுளில் கேக் செய்வது எப்படி என்று தேட ஆரம்பித்து விடுவார்கள். என்னதான் பல் வீடியோக்கள், கட்டுரைகள் இருந்தாலும் முட்டை மைதா இல்லாமல் சுவையான கேக் எப்படி செய்வது என்று அனைவருக்கும் தெரியாமலேயே இருக்கும்.
அப்படி இருப்பவர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு தான் இது. முட்டை மற்றும் மைதா இல்லாமல் கேக் செய்யும் முறை. முட்டை, மைதா இல்லாமல் கேக் செய்தால் நன்றாக இருக்காது கெட்டியாகி விடும் என்றெல்லாம் இனி பயப்பட தேவையில்லை. அதற்கு ஒரு சில டிப்ஸ் மட்டும் ஃபாலோ பண்ணா போதும்.
இதோ முட்டை, மைதா இல்லாமல் கேக் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
ரவை – 1 கப்
சர்க்கரை – 1/2 கப்
பால் – 1/2 கப்
தயிர் – 1/4 கப்
ரீபைண்ட் ஆயில் – 1/4 கப்
ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன்
பேக்கிங் பவுடர் – 1 ஸ்பூன்
பேக்கிங் சோடா – 1/2 ஸ்பூன்
ஒரே அளவிலான கப் மற்றும் ஸ்பூனை பயன்படுத்தவும். உங்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப அளவை மாற்றிக் கொள்ளலாம்.
செய்முறை
ஒரு மிக்ஸி ஜாரில் ரவை, சர்க்கரை, பால், தயிர், ரீபைண்ட் ஆயில், ஏலக்காய் தூள் இவை அனைத்தையும் சேர்த்து 30 நொடிகள் அரைக்க வேண்டும். தயிர் சேர்க்க விருப்பமில்லாதவர்கள் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு பால் கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம்.
இதனை ஒரு பவுலுக்கு மாற்றி அதனுடன் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா இவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பேக்கிங் பவுடர் இல்லாதவர்கள் பேக்கிங் சோடாவை 1/2 ஸ்பூன் சேர்த்து 10 எஇமிடம் ஊற வைக்கவும்.
அடுப்பில் ஒரு அடிகனமான கடாய் அல்லது குக்கரை வைத்து அதனுள் ஒரு ஸ்டாண்டை வைத்து தட்டு போட்டு 5 நிமிடத்திற்கு குறைந்த மிதமான சூட்டில் மூடி விட வேண்டும். பின்னர் கேக் தயாரிக்க வைத்துள்ள கலவைகளை ஒரு பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.
பாத்திரத்தின் உள் பகுதியில் எண்ணெய் பூசி அதன் மேல் மைதா மாவை தூவ வேண்டும். அப்பொழுதுதான் கேக் எடுக்கும் பொழுது சுலபமாக வரும். இந்த பாத்திரத்தில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் ரவை மாவை ஊற்றி நன்றாக சமம் செய்யவும்.
பின்னர் இதை கடாயில் வைத்து மிதமான சூட்டில் வேக வைக்கவும். நன்கு வெந்ததும் அதன் மேல் சுவைக்காக சிறிது முந்திரி, டூட்டி ஃபுரூட்டி சேர்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“