எண்ணெய், அடுப்பு இல்லாமல் விருந்து சமைக்கலாம். சுமார் 16 வகையான உணவுகளை எண்ணெய் அடுப்பு இல்லாமல் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். அடுப்பும் எண்னெயும் இல்லாமல் நமக்கு ஸ்ரீ விநாயகா செட்டிநாடு சமையலறை யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியது போல நாமும் செய்யலாம்.
சாதம்: வெள்ளை அவல் எடுத்து ஒரு இரண்டு முறை கழுவி வடித்து எடுத்து வைத்தால் சாப்பாடு ரெடியாகிவிடும்.
ரசம்: ரசத்திற்கு புளிகரைசலில் நறுக்கிய தக்காளி, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், சீரகம், பூண்டு இவை அனைத்தையும் பிசைந்து தேவையான அளவு உப்பு போட்டு புளி கரைசலை சேர்த்தால் பச்சை புளி ரசம் ரெடி ஆகிவிடும். சுவைக்கு பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
சுரக்காய் தயிர் பச்சடி: பொடியாக நறுக்கிய சுரைக்காய் சிறிது நறுக்கிய இஞ்சி மற்றும் தயிர், கருவேப்பிலை, கொத்தமல்லி தழை, நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து கலக்கினால் தயிர் பச்சடி தயாராகிவிடும்.
வெண்டைக்காய் பொரியல்: நறுக்கிய வெண்டைக்காயை எடுத்து மேலே சிறிது உப்பு, மிளகாய்த் தூள், தேங்காய் சேர்த்து கலந்து வைத்தால் போதும் வழவழப்பு தன்மை இல்லாமல் பொரியல் ரெடி ஆகிவிடும். தேவை பட்டால் வெங்காயம் தூவி கொள்ளலாம்.
புடலங்காய் பொரியல்: புடலங்காய் எடுத்த பொடியாக நறுக்கி அதில் சிறிது உப்பு, பச்சை மிளகாய், துருவிய தேங்காய் சேர்த்து கலந்து வைத்தால் போதும் பொறியல் ரெடி.
பச்சை பயிர் இனிப்பு: பச்சை பயிரை முதல் நாளே ஊற வைத்து எடுத்தால் முளைக்கட்டி இருக்கும். பின்னர் அதில் இனிப்புக்கு சிறிது நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய் பொடி சிறிது எலுமிச்சை பழம் சாறு தூவி வைத்தால் பச்சை பயிர் இனிப்பு ரெடியாகிவிடும்.
கூட்டு: நறுக்கிய பீர்க்கங்காய், வெள்ளரிக்காய், தக்காளி, பச்சை மிளகாய், குடைமிளகாய், சின்ன வெங்காயம், தேவையான அளவு உப்பு, கருவேப்பிலை ஒரு கொத்து நறுக்கி சேர்த்து அரைத்து வைத்த தேங்காய் விழுதையும் சேர்த்து கலந்தால் கூட்டு ரெடியாகிவிடும்.
கேரட் பொரியல்: துருவிய கேரட், பச்சை மிளகாய், இஞ்சி, சின்ன வெங்காயம், எலுமிச்சை சாறு, உப்பு, கொத்தமல்லி தழை, கருவேப்பிலை, தக்காளி சேர்த்தால் கலந்தால் கேரட் பொரியல் ரெடி ஆகிவிடும்.
ஆப்பிள் அல்வா: ஆப்பிளை சிறிது சிறிதாக நறுக்கி மசித்து அதில் சிறிது ஏலக்காய் பொடி, நெய், நாட்டுச்சர்க்கரை அல்லது சர்க்கரை சேர்த்து கலந்து வைத்தால் ஆப்பிள் அல்வா ரெடியாகிவிடும்.
வடை: ஒரு மிக்ஸி ஜாரில் முளைகட்டிய பச்சை பயிறு, கேரட், பீட்ரூட், இஞ்சி, சின்ன வெங்காயம், கருவேப்பிலை, உப்பு, சீரகப்பொடி, மிளகாய் தூள், பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து அதில் தேங்காய் பவுடர் சேர்த்து பிசைந்து வடை போல தட்டி எடுத்தால் வடை ரெடியாகிவிடும்.
கீரை பொறியல்: புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், உப்பு, முளைகட்டிய பச்சை பயிறு கலந்து சிறிது தேங்காய் துருவல் சேர்த்து கிளறினால் எலுமிச்சை சாறு சிறிது சேர்த்து கிளறினால் கீரை பொரியல் ரெடி ஆகிவிடும்.
அறுசுவை தரும் அடுப்பில்லா ஆரோக்கியமான இயற்கை சமையல் | Vegetable Feast No Oil No Boil | சைவ விருந்து
பாயாசம்: பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை வடிகட்டி தேங்காய் பால் எடுத்து அதில் அவல், ஏலக்காய் பொடி, நாட்டு சர்க்கரை, முந்திரி பருப்பு, பச்சை திராட்சை போட்டால் பாயாசம் ரெடி ஆகிவிடும்.
தயிர் சாதம்: அவல், கருவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய், மாதுளம் பழம், ஆப்பிள், திராட்சை, உப்பு போட்டு கலந்தால் தயிர் சாதம் ரெடி ஆகிவிடும்.
மோர்: ஒரு டம்ளரில் தயிர் எடுத்து கருவேப்பிலை, கொத்தமல்லித்தழை, இஞ்சி, பச்சை மிளகாய் போட்டால் மோர் ரெடியாகிவிடும்.
ஊறுகாய்: மாங்காய் எடுத்து உப்பு, மிளகாய் தூள், எண்ணெய் ஊற்றி வைத்தால் ஊறுகாய் ரெடியாகிவிடும்.
ஜூஸ்: பின்னர் எலுமிச்சை சாறு பிழிந்து சர்க்கரை, உப்பு, தண்ணீர் கலந்தால் எலுமிச்சை ஜூஸ் ரெடியாகிவிடும்.
தயிர்: தேங்காயின் வெள்ளை பகுதியை எடுத்து அரைத்து பால் எடுத்து அதில் சிறிது எலுமிச்சை சாறு ஊற்றி இரவு முழுவதும் வைத்தால் தயிர் ரெடியாகிவிடும்.