காஞ்சிபுரம் என்றாலே சமையல் சுவையாக இருக்கும். தனி ருசியும் இருக்கும். அப்படி காஞ்சிபுரம் ஸ்டைலில் ஒரு வாரம் வைத்து சாப்பிடக்கூடிய வத்தக்குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்.
இந்த வத்தக்குழம்பு ஃபேச்சுலர்ஸ், வேலைக்கு செல்பவர்களுக்கு உதவியாக இருக்கும் ஒரு நாள் செய்தால் போதும் அவ்வப்போது எடுத்து பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்
மணத்தக்காளி வத்தல்
தக்காளி
மிளகாய் தூள்
கொத்தமல்லி தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள்
புளி
உப்பு
பெருங்காயத்தூள்
வெல்லம்
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
கடுகு
வெந்தயம்
இஞ்சி
நல்லெண்ணெய்
செய்முறை
ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அது காய்ந்தும் அதில் வெந்தயம், கடுகு இரண்டையும் வதக்கி மணத்தக்காளி வத்தலை சேர்த்து வதக்க வேண்டும்.
வத்தல் பொரிந்து வந்ததும் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் நன்கு பொரிந்து ஈரப்பதம் இல்லாத அளவிற்கு வந்ததும் அதில் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பந்தி முடிந்ததும் PARCEL பண்ணிட்டு போவாங்க! Kancheepuram Vatha Kuzhambu |Chef Deena's Kitchen
அனைத்தும் நன்கு வதங்கியவுடன் அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்க்கவும். தக்காளி ஒரு இரண்டு நிமிடம் வதக்கியதும் அதில் மசாலாக்களை சேர்க்க வேண்டும்.
அதற்கு மிளகாய் தூள், கொத்தமல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம், சிறிது வெள்ளம் சேர்த்து கலந்து விடவும். மசாலாக்களின் பச்சை வாசம் நீங்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் அதில் புளி கரைசலை சேர்க்க வேண்டும்.
பழைய புளியை சேர்த்தால் வத்த குழம்பு சுவை கிடைக்கும். புதுப்புளியை சேர்த்தால் காரக்குழம்பு சுவை கிடைக்கும். எனவே கவனமாக புளியை சேர்க்க வேண்டும்.
புளிக்கரைசலை சேர்த்ததும் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும் நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து பச்சை வாசனை நீங்கி வத்த குழம்பின் வாசம் வந்ததும் இறக்கலாம். இதனை தயிர் சாதத்துடன் வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். பின்னர் கைப்பாடாதவாறு டப்பாவில அடைத்து வைத்து ஒரு வாரம் பயன்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“