இனிப்பு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் கிராமத்து ஸ்டைலில் ஒரு இனிப்பு வகை கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்வார்கள். அப்படி வாழைப்பழம், கோதுமை மாவு வைத்து சுவையான ஹெல்தியான போலி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வாழைப்பழம்
கோதுமை மாவு
கடலை மாவு
உப்பு
நெய்
எண்ணெய்
ரவை
சுடுதண்ணீர்
தேங்காய்
நாட்டுச்சர்க்கரை
செய்முறை
வாழைப்பழத்தை எடுத்து மசித்து கொள்ளவும். ஒரு அகலமான தட்டில் கோதுமை மாவு, கடலைமாவு, உப்பு, வாழைப்பழம் சேர்த்து கலந்து அதில் மசித்த வாழைப்பழம் சிறிது சேர்த்து தண்ணீர் ஊற்றி மாவு மாதிரி பிசைந்து சிறிது எண்ணெய் சேர்த்து ஊறவிடவும்.
பின்னர் ஒரு கடாயில் நெய் சிறிது போட்டு அதில் மசித்து வைத்துள்ள வாழைப்பழத்தை சேர்த்து நெய்யில் அதனை வதக்க வேண்டும். அது வதங்கியதும் அதில் சிறிது ரவை சேர்த்து கலந்து அதில் சுடுதண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
கோதுமை மாவும் 2 வாழைப்பழமும் இருந்தா இந்த மாதிரி soft போளி செஞ்சு பாருங்க|sweet poli without maida
பின்னர் அதில் தேங்காய் துருவலையும் சேர்த்து நன்கு கலந்து இனிப்புக்கு நாட்டுச் சர்க்கரை சேர்த்து கலந்து விடவும். சிறிது நேரம் வேகவைத்து தண்ணீர் வற்றியதும் அதை சிறிது நேரம் ஆறவைத்து கைகளால் நன்கு பிசைந்து விட்டு உருண்டை பிடித்து வைக்கவும்.
ஊற வைத்துள்ள மாவை எடுத்து பிசைந்து வட்ட வடிவமாக திரட்டி அதற்குள் இந்த இனிப்பு உருண்டையை வைத்து போலி தட்டுவது போல் வட்டமாக தட்டி எடுக்கவும். இதனை எப்போதும் போல தோசை கல்லில் போட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்தால் சுவையான இனிப்பு போலி ரெடியாகிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“