10 நிமிடத்தில் அடுப்பு இல்லாமல் நெய், எண்ணெய் இல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே ஸ்வீட் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
சர்க்கரை
முந்திரி
ஏலக்காய்
வறுத்த வேர்க்கடலை
பொரி
தேங்காய் துருவல்
பீட்ரூட் துருவல்
ஒரு மிக்ஸி ஜாரில் முக்கால் கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்து அதில் 10 முந்திரி அரை கப் அளவிற்கு வறுத்த வேர்க்கடலையை தோல் நீக்கி சேர்க்கவும். மேலும் இரண்டு ஏலக்காய் விதை நீக்கி சேர்க்கவும். பின்னர் இதனை நன்கு மைய அரைக்கவும்.
சர்க்கரை அளந்த அதே கப்பில் 2 அல்லது 3 கப் அளவிற்கு பொரி சேர்த்து நன்கு மைய அரைக்கவும். பின்னர் இரண்டையும் நன்கு மைய கலந்து கொள்ள வேண்டும். சர்க்கரை மற்றும் பொரியை நன்கு மைய அரைக்க வேண்டும் இல்லையென்றால் இனிப்பு நன்றாக வராது.
பின்னர் இந்த இனிப்பு பொடியை சரியான அளவில் வேறொரு கப்பில் பிரித்து எடுத்து கொள்ள வேண்டும். ஒரு கப் பொடியை ஒரு தாட்டில் சேர்க்கவும். பின்னர் ஒரு பவுலில் துருவிய தேங்காயில் சிறிது தண்ணீர் ஊற்றி தேங்காய் பால் எடுத்து கொள்ளலாம்.
பின்னர் தேங்காய் பாலை தட்டில் வைத்துள்ள இனிப்பு பொடியில் ஊற்றி அழுத்தி கையில் மாவு ஒட்டாத பதத்திற்கு பிசைய வேண்டும்.
பின்னர் வேறொரு கப்பில் பீட்ரூட் துருவலை சேர்த்து அதனுடன் சிறிது சிறிதாக நீர் சேர்த்து சாறு எடுத்து கொள்ள வேண்டும். மற்றொரு கப்பில் எடுத்து வைத்துள்ள இனிப்பு பொடியுடன் இந்த பீட்ரூட் சாறை சேர்த்து பிசைய வேண்டும்.
பின்னர் மாவு நன்கு இறுகி மென்மையான பதத்திற்கு வந்ததும் சப்பாத்தி மாவு தேய்ப்பது போல தேய்க்க வேண்டும்.
பின்னர் தேங்காய் பால் கலந்த மாவின் மீது பீட்ரூட் சாறு கலந்த மாவை வைத்து பருப்பி பதத்திற்கு தேய்த்து சதுரமாக வெட்டி எடுக்கவும். பின்னர் சுவையான அடுப்பு இல்லாமல் செய்த பருப்பி போன்ற இனிப்பு தயாராகிவிடும்.
இதை காயாமல் எறும்பு பிரச்சனை வராதவாறு பாத்திரத்தில் மூடி ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“