சப்பாத்தி செய்த சிறிது நேரத்தில் கட்டியாகி விடுகிறதா அப்படி என்றால் எண்ணெய் இல்லாத சாஃப்ட் சப்பாத்தி எப்படி செய்வது என்று கேக் பேக்ஸ் லைஃப்ஸ்டைல் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் உப்பு போட்டு சூடாக்கி தண்ணீர் சூடானதும் அதில் கோதுமை மாவு போட்டு கிளறவும். மாவு சேர்த்த உடன் அடுப்பை அணைத்துவிட்டு தண்ணீர் மாவில் ஒட்டியவுடன் அதை ஒரு பத்து நிமிடம் மூடி வைக்கவும்.
பின்னர் சூடு ஆறியதும் எப்போதும் போல மாவு ஒன்றாகும் வரை சப்பாத்தி மாவு பிசைந்து திரட்டி எடுக்கவும். மாவு சாஃப்டாக இருக்கும். எப்போதும் போல உருட்டி கொள்ளவும். வரமாவு போட்டு சப்பாத்தி திரட்டி எடுத்து எண்ணெயில்லாமல் இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கலாம்.