ரொம்பவே சாஃப்ட்டான, டேஸ்டியான பஞ்சு மாதிரி இருக்கிற தோசை அதுவும் உளுந்து சேர்க்காமல் எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த மாதிரி தோசை செய்தால் எவ்வளவு நேரம் ஆனாலும் சாஃப்டாவே இருக்கும்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி
வெந்தயம்
பொரி
அரிசி ஆட்டுவதற்காக பச்சரிசியை தேவையான அளவு நன்கு கழுவி சுமார் 5 முதல் 6 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அதோட ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயம் சேர்த்துக்கலாம். அரிசி நல்லா ஊறி வந்திருக்கு இப்ப நம்ம ஊறவைத்த அரிசியை தண்ணியை வடிச்சிட்டு மிக்ஸியில கொஞ்சம் கொஞ்சமாக தண்ணியை சேர்த்து அரைக்க வேண்டும். அதிக அளவிலான மாவு இருந்தா கிரைண்டரிலும் அரைச்சுக்கலாம்.
இப்போ அரிசி அளந்த அதே கப்ல 3 கப் அளவுக்கு பொரி வந்து தேவையான அளவுக்கு தண்ணி சேர்த்து பொரிய ஒரு பத்து நிமிஷம் ஊற வைக்கனும். நல்லா அரைச்ச மாவோட ஊறிய பொரியையும் நல்லா அரைத்து சேர்த்துக்கனும்.இரண்டையும் நன்றாக கலந்து நல்லா சுமார் ஒரு எட்டு மணி நேரம் போல புளிக்க வைக்கனும்.
8 மணி நேரம் கழித்து மாவை நல்லா கலந்து இப்போ தோசை சுடலாம். கொஞ்சம் கூட எண்ணெய் சேர்க்காமல் எப்போதும் போல தோசை சுடலாம். கல்லில் மாவு ஊற்றியதும் மேலே ஒரு நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும். தோசையை இரண்டு பக்கம் திருப்பி போட்டும் வேக வைக்கலாம் இல்லை என்றால் ஒரு பக்கம் கூட வேகவைத்து எடுத்து எப்போதும் போல சாம்பார் சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம்.
உளுந்து சேர்த்தா மட்டும்தான் நல்லா பொங்கி வரும் என்று மாவு ஆட்டும்போது நம் கவனம் முழுக்க உளுத்தம்பருப்பு சேர்ப்பதிலேயே இருக்கும். ஆனால் உளுந்து சேர்க்காமலும் சாஃப்டா தோசை சுடலாம்.
இந்த மாவுல தோசை சன்னமாகவும் ஊத்திக்கலாம், மொத்தமாகவும் ஊத்திக்கலாம். எப்போதும் போல மாவாட்டி தோசை சுடும்போது ச்து சில நேரத்திலேயே காய்ந்து விடும். ஆனால் இந்தமாதிரி தோசை சுடும்போது அது எப்போதும் காயாமல் மிருதுவாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“