இட்லி, தோசைக்கு தேங்காய், ஒரு சொட்டு எண்ணெய் ஏன் மிக்ஸியில் கூட அரைகாத தக்காளி சட்னி செய்து இருக்கீங்களா. அப்படி இல்லைன்னா ஒருமுறை இப்படி ட்ரை பண்ணுங்க. இந்த தக்காளி சட்னி சப்பாத்தி, பூரிக்கு ரொம்ப நல்லா இருக்கும்.
தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம்
தக்காளி
மிளகாய் தூள்
கல் உப்பு
மிளகாய் தூள்
கொத்தமல்லி இலை
பெரிய வெங்காயம், தக்காளி எடுத்து நல்லா நறுக்கி ஒரு குக்கரில் போடவும். அதனுடன் மிளகாய் தூள், கல் உப்பு, மஞ்சள் தூள் மூன்றையும் தேவையான அளவு எடுத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து குக்கரில் வைத்து விடவும்.
எவ்வளவு வெங்காயம் எடுக்குறோமோ அதில் இரண்டு மடங்கு தக்காளி எடுக்க வேண்டும். தக்காளியில் இருக்கிற தண்ணிரே நிறைய இருக்கும் அதனால் தண்ணீர் சிறிது குறைவாகவே சேர்த்து கொள்ளலாம்.
குக்கரை மூடி மீடியம் பிளேம்ல அடுப்பில் ஒரு 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். 5 நிமிடம் கழித்து திறந்து நல்லா கலந்து விட்டுட்டு திரும்பவும் மீடியம் ஃபிளேம்லயே இன்னொரு அஞ்சு நிமிஷம் வேக வைக்க வேண்டும். அதுல இருக்கிற தண்ணீர் இப்போ நல்ல சுண்டி இருக்கும்.
அதுல சிறிதளவு கொத்தமல்லி இலை தூவி ஒரு அரை ஸ்பூன் அளவுக்கு சர்க்கரை சேர்த்து கலந்து விட வேண்டும். இப்படி செய்தால் உங்க குழந்தைங்க நோ சொல்லாமல் இந்த சட்னியை விரும்பி சாப்பிடுவாங்க. இந்த சட்னியை சப்பாத்திக்குள்ள வைத்து ரோல் செய்தும் சாப்பிடலாம். அவ்வளவு நல்ல லட்ச் பாக்ஸ் ரெசிபியாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“