எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதால் பல பிரச்சனைகள் வருகிறது. ஆனால் சாப்பிடாமலும் இருக்க முடியவில்லை என்று நினைக்கிறீர்களா? உங்களுக்காக தான் இந்த டிப்ஸ்.
கொஞ்சம் கூட எண்ணெய் சேர்க்காமல் இட்லி பாத்திரத்தில் மெதுவடை செய்யலாம். வயதானவர்கள், கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் கூட இந்த வடையை சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
உளுந்து
அரிசி மாவு
மிளகு
சீரகம்
வெங்காயம்
கொத்தமல்லி
இஞ்சி
உப்பு
கருவேப்பிலை
ஆப்பசொடா
செய்முறை
உளுந்து எடுத்து வறுத்து ஆறவத்து மிக்ஸியில் அறைக்கவும். இதை நன்கு பவுடர் மாதிரி அரைத்து வைக்கவும். இதனை ஒரு பவுலில் சேர்த்து அரிசி மாவு, மிளகு, சீரகம், வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, உப்பு கருவேப்பிலை சேர்த்து கலக்கவும்.
இதில் சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். பின்னர் இதனை 5 நிமிடம் ஊற வைக்கவும். நன்கு ஊறி வந்ததும் அதில் ஆப்பசோடா சேர்த்து கலந்து வடை தட்டலாம்.
அதற்கு ஒரு வாழை இலை எடுத்து அதை ரவுண்டாக கட் செய்து மாவை வடை மாதிரி வாழை இலையில் தட்டி வைக்கவும்.
அடடா எங்கேயும் கேள்விப்படாத ஐடியாவா இருக்கே/Kitchentips in Tamil/
வடையை இட்லி பாத்திரத்தில் தான் வேக வைக்க போகிறோம். அதற்கு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கொதித்து வந்ததும் வாழை இலையை அப்படியே எடுத்து இட்லி தட்டில் உள்ள அந்த குழியில் வைத்து வேக விடவும். இட்லி வேகும் நேரம் தான் இதற்கும் எடுக்கும்.
நன்கு வெந்ததும் எடுத்து சாப்பிடலாம். எண்ணெயில் சுடும் வடை மாதிரியே சாஃப்டாக டேஸ்டியாக இருக்கும்.
இந்த தகவல்கள் நளினி மாணிக் குக்கிங் சேனலில் பதிவிடப்பட்ட வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டது.