எண்ணெய் மற்றும் அடுப்பு இல்லாமல் இட்லி மற்றும் சட்னி எப்படி செய்வது என்று இந்தியன் ரெசிபீஸ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
அவல் தேங்காய்ப்பால் பால் வெற்றிலை இஞ்சி தக்காளி தேங்காய் வேர்க்கடலை உப்பு சீரகம் மிளகு எலுமிச்சை சாறு மிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி தழை
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு கப் அளவிற்கு அவல் எடுத்து அரைத்துக் கொள்ளவும். பின்னர் இதில் தேங்காய் பால் சேர்த்து கலந்து விடவும். பின்னர் இதில் பால் சேர்த்து கெட்டியாக பிசைந்து இட்லி பாத்திரத்தில் எப்போதும் போல இந்த மாவை வைத்து கையில் இட்லி மாதிரி தட்டி விடவும்.
பின்னர் இதனை வேக வைக்காமல் ஒரு அரை மணி நேரம் இட்லி தட்டிலேயே வைத்து மூடி விடவும்.
பின்னர் இதற்கு சட்னி செய்வதற்கு வெற்றிலை எடுத்து சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் போடவும் தேங்காய், வேர்க்கடலை, சீரகம், மிளகு, உப்பு, கொத்தமல்லி, கருவேப்பிலை, பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு சேர்த்து துவையல் பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
அவ்வளவுதான் சட்னி ரெடி இப்போது வைத்துள்ள அவல் இட்லியையும் எடுத்து பரிமாறலாம்.