Advertisment

கல்யாண வீட்டில் தனி இடம்... மணக்க மணக்க மைசூர் ரசம்; பூண்டு, தக்காளி எதுவும் வேணாம்: ஜீரணத்திற்கு இதுதான் பெஸ்ட்!

பூண்டு, தக்காளி இல்லாத கல்யாண வீட்டு மணக்கும் மைசூர் ரசன் செஃப் தீனா ரெஸிபி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
கல்யாண ரசம்

கல்யாண ரசம் செய்முறை

ரசம் என்பது ஜீரனத்திற்கு மிக சிறந்த ஒன்றாகும். அதில் நிறைய வகைகளும் உள்ளது. எந்த வகையான பந்தியிலும் ரசம் இல்லாமல் பந்தி நிறைவு பெறாது. அப்படிப்பட்ட ரசத்தில் தக்காளி, பூண்டு இல்லாமல் மைசூர் ரசம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Advertisment

இந்த வகையான ரசம் பெரும்பாலும் கல்யாண வீடுகளில் பந்தி முடித்து நிறைய வகையான உணவுகளை சாப்பிட்டு இருப்பவர்களின் ஜீரணத்திற்கு வழங்க செய்யப்பட்டது.

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு - 3 டீஸ்பூன்
கொத்தமல்லி - 2 டீஸ்பூன்
கருப்பு மிளகு - 1 டீஸ்பூன்சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் 
காய்ந்த மிளகாய் - 5  
துருவிய தேங்காய் - 3 டீஸ்பூன்
உப்பு  
கறிவேப்பிலை 
கடுகு - 1/2 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
புளி - 100 கிராம்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
நல்லெண்ணெய்  

Advertisment
Advertisement

செய்முறை

ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி காய்ந்ததும் அதில் துவரம்பருப்பு, மல்லி, வரமிளகாய், மிளகு, சீரகம், கட்டி பெருங்காயம் அனைத்தையும் கலந்து ஊறவிடவும். சிறிதுநேரம் கழித்து அதில் சிறிது தேங்காய் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.

பின்னர் ஊறவைத்த புளியை புளி தண்ணீராக கரைத்து எடுக்கவும். அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். ஒரு கொதி வந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்க வேண்டும். நுரை பொங்கி வந்ததும் அதில் தாளிப்பை சேர்க்கவும். 

மணக்க மணக்க மைசூர் ரசம் | Traditional Mysore Rasam Recipe | CDK 1101 | Chef Deena's Kitchen

ஒரு சிறிய கரண்டியில் நெய், நல்லெண்ணெய், கடுகு, கட்டி பெருங்காயம் அனைத்தும் சேர்த்து பொறிந்ததும் அடுப்பை அணைத்து கருவேப்பிலை சேர்த்து அந்த தாளிப்பை ரசத்தில் கொட்டி இறக்கினால் மைசூர் ரசம் தயாராகிவிடும். தேவைப்பட்டால் சிறிது வெல்லம் சேர்க்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Cooking Tips Rasam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment