காய்கறி இல்லாமல் சட்டென்று 15 நிமிடத்தில் இந்த காரைக்கால் கட்டுச்சோறு சாப்பாடு செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
எண்ணெய்
கடுகு, உளுந்து,கடலை பருப்பு
கருவேப்பிலை,கொத்தமல்லி தழை
சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம்
புளி கரைசல்
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
தேங்காய் பால்
உப்பு
சீரகத்தூள்மிளகுத் தூள்
பூண்டு
காய்ந்த மிளகாய்
ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் 15 பல் பூண்டு, கருவேப்பிலை இரண்டையும் சேர்த்து தாளிக்கவும். பின்னர் காய்ந்த மிளகாயை கிள்ளி சேர்த்து வதக்கவும்.
இதனுடன் ஒரு பெரிய வெங்காயம் 100 கிராம் சின்ன வெங்காயத்தை நறுக்கி சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியவுடன் சிறிது மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
பின்னர் சீரகத்துள், மிளகுத்தூள் போட்டு மிதமான சூட்டில் வதக்கவும். புளித்தண்ணீர் கரைத்து சேர்க்க வேண்டும். தண்ணீர் ஒரு கொதி வந்தவுடன் அதனுடன் ஒரு கப் தேங்காய் பால் சேர்க்க வேண்டும்.
இவை அனைத்தையும் ஒரு இரண்டு நிமிடம் வேகவைத்து பின்னர் ஊற வைத்த அரிசியை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும் குக்கரின் மூடியை மூடவும். பின்னர் ஒரு மூன்று விசில் விட்டு இறக்க வேண்டும்.
விசில் அடங்கியவுடன் சிறிது கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“