வீட்டில் காய்கறி இல்லாத நேரத்தில் இந்த ஒரு டிஷ் செய்து சாப்பிடலாம். சுவையாகவும் இருக்கும் வேலையும் எளிதில் முடிந்து விடும்.
குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெஸிபி, வேலைக்கு செல்பவர்களுக்கு காலையில் சட்டென்று சாப்பிட ஒரு டிபனாக கூட இதை செய்யலாம். காய்கறி இல்லாத சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய்
கடுகு
உளுந்து
கடலை பருப்பு
சீரகம்
பச்சை மிளகாய்
கருவேப்பிலை
வெங்காயம்
குடைமிளகாய்
மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
கரம் மசாலா
உப்பு
இஞ்சிபூண்டு பேஸ்ட்
சாதம்
மிளகுத்தூள்
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், பச்சை மிளகாய் நறுக்கியது, கருவேப்பிலை சிறிது சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வீட்ல காய்கறி இல்லையா? அப்ப உடனே இப்படி செஞ்சு அசத்துங்க! | 5 Minute Lunch Recipes | 5 Minute Recipe
அதன் பச்சை வாசம் நீங்கியவுடன் வடித்து வைத்துள்ள சாதத்தை அதில் சேர்த்து கிளறி விடவும். இறக்கும் நேரத்தில் சிறிது மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கினால் சூடான சுவையான காய்கறி இல்லாத சாதம் ரெடி ஆகிவிடும். பின்னர் தேவைப்பட்டால் மேலே சிறிது மல்லி இலைகளையும் தூவி விடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“