நோ வொர்க் அவுட்; நோ டயட்... உடல் எடையை கடகடன்னு குறைக்கும் இந்தக் கஞ்சி; நீங்களும் ட்ரை பண்ணுங்க!

இனி கஷ்டப்பட்டு வொர்கவுட் டயட் எல்லாம் செய்ய வேண்டாம், இந்த ஒரு கஞ்சி போதும் உங்கள் உடல் எடையை குறைக்க உதவும்.

இனி கஷ்டப்பட்டு வொர்கவுட் டயட் எல்லாம் செய்ய வேண்டாம், இந்த ஒரு கஞ்சி போதும் உங்கள் உடல் எடையை குறைக்க உதவும்.

author-image
Kalaiyarasi Sundharam
New Update
karuppu kavuni

உடலை இளைக்க வைக்க வேண்டும் என்று நினைக்கும் பலருக்கும், கடுமையான உடற்பயிற்சிகளை செய்வதோ அல்லது டயட்களைப் பின்பற்றுவதோ சவாலாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்காக, தொப்பையை எளிதில் குறைக்க உதவும் அற்புதமான மற்றும் பாரம்பரியமான ஆரோக்கியமான கஞ்சி இது. இந்தக் கருப்பு கவனி அரிசி கஞ்சி தினமும் தவறாமல் எடுத்துக்கொண்டால், வெயிட் அப்படியே சரசரவென லாஸ் ஆகிவிடும். சர்க்கரை நோயாளிகளும் இதை அருந்தலாம். இதில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளதால், இது உங்களுக்கு எடை இழப்பு காலத்தில் அதிக சோர்வு வராமலும் காக்கும். இதனை எப்படி செய்வது என்று கொங்குநாட்டு சுவை இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்:

கருப்பு கவினி அரிசி: தாராளமான அளவு  
கருப்பு கொள்ளு: நார்மலாவே கொள்ளு வெயிட் லாஸ்க்கு நல்லாவே ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்
பார்லி
பாசிப்பருப்பு: எடை குறைக்கும் நேரத்தில் வரும் சோர்வைத் தவிர்க்க
குருமிளகு
சீரகம்
பூண்டு

செய்முறை: 

முதலில் ஒரு கடாயில் தாராளமான அளவு கருப்பு கவினி அரிசியைச் சேர்த்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து லைட்டாக வறுக்கவும். அரிசி லேசாக வறுபட்டதும், இதனுடன் அதிக சத்துக்கள் நிறைந்த கருப்பு கொள்ளு, பார்லி, மற்றும் பாசிப்பருப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். பிறகு, சுவையைக் கூட்டி கொடுப்பதற்காக குருமிளகு, சீரகம், மற்றும் சிறிது தட்டிய பூண்டு சேர்த்து, அனைத்தையும் ஒன்றாக வறுக்கவும்.

வறுத்த இந்தக் கலவையை ஆற வைத்து, நன்கு அரைத்து பவுடராக எடுத்து வைத்துக் கொள்ளவும். அதிக சத்துக்கள் நிறைந்த வெயிட் லாஸ்க்கான கஞ்சி பவுடர் இப்போது தயார். தினமும் காலையில், சுடு தண்ணீரில் இந்த கஞ்சிப் பொடியை இரண்டு ஸ்பூன் சேர்த்து, கட்டியில்லாமல் நன்கு மிக்ஸ் செய்யவும்.

Advertisment
Advertisements

இதை அடுப்பில் வைத்து கஞ்சியாகக் காய்ச்சி (அதாவது, ஒரு கொதி வரும் வரை வைக்கலாம்), இறுதியாகக் கொஞ்சம் உப்பு போட்டு குடித்து வாருங்கள். இந்தக் கஞ்சியைத் தினமும் காலையில் எடுத்து வரும்போது, தொப்பை குறைவதையும், உடல் எடை ஆரோக்கியமான முறையில் லாஸ் ஆவதையும் நீங்களே உணரலாம்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Basic tips for sustainable weight loss Best tips for losing weight during festive season

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: