எடை குறைப்பு முயற்சியில் இருப்பவர்களுக்கு, வயிறு நிரம்ப சாப்பிட்டாலும் எடை அதிகரிக்காத ஒரு அருமையான காலை உணவு முட்டைக்கோஸ் பான் கேக். இது மிகவும் குறைவான கலோரிகளுடன், ஆரோக்கியமான ஒரு தேர்வாகும். ஆரோக்கியமான மற்றும் சுவையான காலை உணவு மட்டுமின்றி இது எடை குறைப்புக்கு மிகவும் பயனுள்ளது.இந்த சுவையான பான் கேக்கை எப்படி செய்வது என்று ஸ்பேர்ரோஸ்டிலைட் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
முட்டைக்கோஸ்
கேரட்
வெங்காயம்
பூண்டு
கொத்தமல்லி இலை
பச்சை மிளகாய்
மிளகாய் தூள்
மிளகுத்தூள்
கரம் மசாலா
மஞ்சள் தூள்
உப்பு
கடலை மாவு
செய்முறை:
ஒரு கலக்கும் கிண்ணத்தில், மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிய ஒரு கப் முட்டைக்கோஸ், அதேபோல் நறுக்கிய கேரட் மற்றும் வெங்காயம் சேர்க்கவும். அதனுடன், பொடியாக நறுக்கிய பூண்டு, கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய் சேர்க்கவும். மசாலாப் பொருட்களாக, ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள், ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள், ஒரு டீஸ்பூன் கரம் மசாலா, ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
கடைசியாக, அனைத்து காய்கறிகளும் ஒன்றாக கலப்பதற்காக, கால் கப் கடலை மாவு சேர்த்து, இரண்டு டேபிள்ஸ்பூன் தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கவும். நாம் தயார் செய்த இந்த கலவையை சிறு சிறு பான் கேக்குகளாக ஊற்றி, ஐந்து நிமிடங்கள் சமைத்தால், ஒரு அற்புதமான காலை உணவு தயாராகிவிடும்.
இது மிகவும் ஆரோக்கியமானது. இந்த முட்டைக்கோஸ் பான் கேக்கை வயிறு நிறைய சாப்பிட்டு, ஆரோக்கியமாக எடை குறைக்கவும். மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களுக்கு எங்களை பின்தொடரவும். எடை குறைப்பு முயற்சியில் உள்ளவர்களுக்கு முட்டைக்கோஸ் பான் கேக் ஒரு சிறந்த காலை உணவாகும். இது குறைந்த கலோரி கொண்டதாகவும், வயிறு நிரம்ப சாப்பிட்டாலும் எடை அதிகரிக்காத வகையிலும் தயாரிக்கப்படுகிறது.