நார்த் இந்தியா ஸ்டைலில் மிகவும் சுவையான ஒரு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் பாவ் பஜ்ஜி எப்படி செய்வது பார்ப்போம். கடைகளில் ஹெல்தியாக இருக்குமா என்ற தயக்கத்தில் சாப்பிடாமல் இருப்பவர்கள் இதை வீட்டில் செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய்
பட்டர்
சீரகம்
நறுக்கிய வெங்காயம்
பூண்டு
கேரட்
காலிஃபிளவர்
உருளைக்கிழங்கு
குடைமிளகாய்
பீட்ரூட்
பச்சை பட்டாணி
கொத்தமல்லி தூள்
மிளகாய் தூள்
பாவ் பாஜி மசாலா
மஞ்சள் தூள்
உப்பு
தக்காளி
கொத்தமல்லி தழை
பாவ் பன்
செய்முறை
ஒரு குக்கரில் எண்ணெய், பட்டர், சீரகம், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் பூண்டு, கேரட், காலிஃபிளவர், உருளைக்கிழங்கு, குடைமிளகாய், பீட்ரூட், பச்சை பட்டாணி, கொத்தமல்லி தூள், மிளகாய் தூள், பாவ் பாஜி மசாலா, மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கலந்து விட்டு தண்ணீர் சிறிது சேர்த்து வேகவிடவும்.
வேகும் நேரத்தில் அதில் சேர்க்க தக்காளி மசாலா செய்ய வேண்டும். அதற்கு ஒரு கடாயில் பட்டர் சேர்த்து வெங்காயம், மிளகாய் தூள், மசாலா மாதிரி அரைத்த தக்காளி சேர்த்து கிளறி வேகவிட்டு இறக்கவும்.
ஒன் பாட் பாவ் பாஜி
குக்கரில் உள்ள காய்கறிகள் வெந்ததும் அதை மசித்து அதில் தாளித்த இந்த தக்காளி மசாலாவையும் சேர்த்து கலந்து விட்டு வேகவிடவும். பின்னர் மேலே சிறிது கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கலாம். பின்னர் தோசைக்கல்லில் பட்டரை தேய்த்து பாவ் பன்னை ரோஸ்ட் செய்யவும்.
பின்னர் இதனை கடைகளில் பரிமாறுவது போல பரிமாறி சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.
இந்த தகவல்கள் அனைத்தும் ஸ்பைசி சமையல்ஸ் யூடியூப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது.