வடநாடுகளில் கிடைக்கும் வெள்ளைகுருமா, அதுவும் ஹோட்டல் ஸ்டைலில் இனி வீட்டிலேயே அதுவும் 15 நிமிடத்தில் செய்யலாம். சுவையாகவும் சப்பாத்தி, பூரிக்க ஏற்ற நல்ல காம்பினேஷனாகவும் இருக்கும். புது புது டிஷ் ட்ரை பண்ண விரும்புபவர்கள் வெறும் 15 நிமிடத்தில் இதை செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
துருவிய தேங்காய்
முந்திரி பருப்பு
பொட்டு கடலை
பெருஞ்சீரகம்
இலவங்கப்பட்டை
கிராம்பு
ஏலக்காய்
எண்ணெய்
கல்பாசி
ஜாவித்ரி
பிரியாணி இலை
வெங்காயம்
பச்சை மிளகாய்
உருளைக்கிழங்கு
கேரட்
பீன்ஸ்
பச்சை பட்டாணி
இஞ்சி பூண்டு விழுது
உப்பு
கறிவேப்பிலை
செய்முறை:
துருவிய தேங்காய், முந்திரி, பொட்டு கடலை, பெருஞ்சீரகம், இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய் தண்ணீர் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் எடுத்து வைக்கவும். அனைத்தையும் நன்றாக பேஸ்டாக அரைத்து தனியாக வைக்கவும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் எடுத்து, இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, ஜாவித்ரி, பிரியாணி இலை சேர்க்கவும். மேலும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து 3 நிமிடம் வறுக்கவும்.
நறுக்கிய உருளைக்கிழங்கு, நறுக்கிய கேரட், நறுக்கிய பீன்ஸ், புதிய பச்சை பட்டாணி சேர்க்கவும். இவை அனைத்தையும் கலந்து சுமார் 3 நிமிடங்கள் வதக்கவும். அடுத்ததாக இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
சுவையான குருமா ரெசிப்பீஸ் | Kurma Recipes In Tamil | Side Dish Recipes |
கடாயில் தண்ணீர் சேர்த்து, கடாயை மூடி, காய்கறிகளை சுமார் 10 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். இப்போது அரைத்த மசாலா விழுதைச் சேர்த்து, 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு தண்ணீரி கலந்து 10 நிமிடங்கள் வேகவைக்கவும்.
அவ்வளவு தான் கடைசியாக கறிவேப்பிலை சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான வெள்ளை வெஜிடபிள் குருமா சூடாக ரெடியாகிவிடும்.
சப்பாத்தி, பூரி, ஆப்பத்திற்கு எல்லாம் சுவையாக இருக்கும். வெறும் 15 நிமிடத்தில் இதை செய்து விடலாம்.