scorecardresearch

வெயில் காலத்தின் சிறப்பான தேர்வு நுங்குதான்: சுகர் பேஷண்ட்ஸ் சாப்பிடலாமா?

சர்க்கரை நோயாளிகளும் நுங்கை சாப்பிடலாம், இதில் இனிப்பு அதிகமாக இல்லை. அதற்காக அதிக அளவில் நுங்கு சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரிக்கும். இதனால் 2 முதல் 3 பழங்கள் வரை அவர்கள் சாப்பிடலாம்.

நுங்கு

வெயில் காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால், நுங்கு சாப்பிடவது நல்லது. இந்நிலையில் சின்னம்மை மற்றும் பெரியம்மை நோய் ஏற்பட்டவர்களுக்கு உடல் உஷ்ணத்தை குறைக்க இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

வெப்பம் தாக்கம் அதிகமாக இருந்தால் நுங்கு எடுத்துக்கொள்ளாம். இதில். 95 சதவிகிதம் தண்ணீர் சத்து இருப்பதால் நீங்கள் நுங்கை சாப்பிடலாம். வெப்பத்தின் தாக்கத்தால் ஏற்படும்  மயக்கம், கடும் சோர்வு நீங்கும்.

கருவுற்ற பெண்களுக்கு உணவு சாப்பிடும்போது, உணவு செரிமாணத்தில் பிரச்சனை, நெஞ்செரிச்சல்,  மலச்சிக்கல் ஏற்படும். இந்நிலையில் நுங்கு சாப்பிட்டால் இந்த பிரச்சனை தீரும்.

வெயிலில் வெளியே சென்று வேலை செய்பவர்கள், கடுமையாக உடல் பயிற்சி செய்பவர்கள், தினமும் நொங்கு சாப்பிடுவது நல்லது.

கல்லீரல் அரோக்கியத்திற்கு நுங்கு முக்கிய பங்காற்றுகிறது. நமது சாப்பிடும் உணவுள் நச்சுதன்மையை கல்லீரல் சுத்தம் செய்கிறது. இந்நிலையில் இந்த நச்சுத் தன்மை கல்லீரலில் இருந்து நீங்க. நுங்கு உதவுகிறது. கல்லீரலில் புண்கள் ஏற்பட்டிருந்தால் நுங்கு அதை குணப்படுத்தும்.

வயிறு மற்றும் குடல்களில் உள்ள நச்சுக்களை நீக்கி, வெளியேற்ற உதவுகிறது. குடல் மற்றும் இரைப்பை ஆகியவற்றில் உள்ள நச்சுக்களை நிக்கும்.

சர்க்கரை நோயாளிகளும் நுங்கை சாப்பிடலாம், இதில் இனிப்பு அதிகமாக இல்லை. அதற்காக அதிக அளவில் நுங்கு சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரிக்கும். இதனால் 2 முதல் 3 பழங்கள் வரை அவர்கள் சாப்பிடலாம்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Nunku for diabetes patients and benefits

Best of Express