பாலை விட பல மடங்கு சத்து... பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த தானியத்தை இப்படி செய்து குடுத்துப் பாருங்க: ஊட்டச்சத்து நிபுணர் அனுசியா

பாலூட்டும் தாய்மார்கள் பலருக்கும் தாய்ப்பால் சுரக்கவில்லை, அவர்களுக்கு பால் சுரக்க வேண்டுமானால், இந்த தானியத்தை இப்படி செய்து கொடுத்தால் தாய்ப்பால் சுரக்கும் என்று ஊச்சட்டச்சத்து நிபுணர் அனுசியா கூறுகிறார்.

பாலூட்டும் தாய்மார்கள் பலருக்கும் தாய்ப்பால் சுரக்கவில்லை, அவர்களுக்கு பால் சுரக்க வேண்டுமானால், இந்த தானியத்தை இப்படி செய்து கொடுத்தால் தாய்ப்பால் சுரக்கும் என்று ஊச்சட்டச்சத்து நிபுணர் அனுசியா கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
ragi

எல்லா இடங்களிலும் மிக எளிமையாகக் கிடைக்கக்கூடிய மிக எளிமையான தானியத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் அனுசியா ஆலோசனைகளை வழங்கியுள்ளார். (Image: YouTube / @Medical Online India)

பாலூட்டும் தாய்மார்கள் பலருக்கும் தாய்ப்பால் சுரக்கவில்லை, அவர்களுக்கு பால் சுரக்க வேண்டுமானால், இந்த தானியத்தை இப்படி செய்து கொடுத்தால் தாய்ப்பால் சுரக்கும் என்று ஊச்சட்டச்சத்து நிபுணர் அனுசியா கூறுகிறார். பாலை விட பல மடங்கு கால்சியம் சத்து அதிகம் உள்ள அது என்ன தானியம், எப்படி செய்ய வேண்டும் என்று இங்கே பார்ப்போம். 

Advertisment

எல்லா இடங்களிலும் மிக எளிமையாகக் கிடைக்கக்கூடிய மிக எளிமையான தானியத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மெடிகல் ஆன்லைன் இந்தியா (Medical Online India) என்ற யூடியூப் சேனலில் ஊட்டச்சத்து நிபுணர் அனுசியா ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

ஊட்டச்சத்து நிபுணர் அனுசியா, “அந்தக் காலத்தில் நம்முடைய பாட்டிமார்கள், தாத்தாமார்கள் ராகியை (கேழ்வரகு) அரைத்து அதை முதல் நாள் இரவு கரைத்து புளிக்கை வைத்து மறுநாள் கூழ் செய்து சாப்பிடுவார்கள். உண்மையில் அறிவியல் பூர்வமாக அதில் உள்ள நன்மைகள் குறித்து சாப்பிட்டார்களா என்று தெரியவில்லை. ஆனால், ராகியில் அவ்வளவு நன்மைகள் இருக்கும். ஆனால், நாம் ராகி கூழ் என்று இலக்காரமாகக்கூட நினைக்கலாம். ஆனால், அதில் அவ்வளவு சத்துக்கள் இருக்கிறது. இப்போது அதைப்பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், கேப்பைக் கூழ் என எல்லாமே சாப்பிட கிடைக்கிறது. ரோட்டுக் கடைகளில் எல்லாம் எளிதாகக் கிடைக்கிறது. இந்த ராகி மாவு நம்ம வீட்டிலேயே கூட இருக்கும். ஆனால், நாம் அதை கண்டுகொள்ள மாட்டோம் என்றைக்காவது ஒரு நாள் அடை செய்து சாப்பிடுவோம். ஆனால், நாம் அதை வாரத்திற்கு 3 நாள் அல்லது 4 நாள் சாப்பிட்டால் ரொம்ப நல்லது. அதில் பல நன்மைகள் உள்ளன” என்று கூறுகிறார்.

Advertisment
Advertisements

பாலை விட ராகியில் நிறைய கால்சியம் சத்து இருக்கிறது. குழந்தைகளுக்கு நிறைய பேருக்கு லேக்டோஸ் இன் டாலரன்ஸ் இருக்கும். அவர்களுக்கு பால் சேராது. பால் ஒவ்வாமை இருக்கும். பால் குடித்தால் அவர்களுக்கு உடல் ஏற்றுக்கொள்ளாது. பல் அரிக்கும் என்பார்கள். அவர்களுக்கு எல்லாம் மருத்துவர்கள் ஊட்டச் சத்து நிபுணர்கள் எல்லாம் பாலுக்கு பதில் ராகியை எடுத்துக்கொள்ளுங்கள் என்று பரிந்துரைப்பார்கள். 

ஒரு டம்ப்ளர் பாலில் இருக்கக்கூடிய கால்சியத்தைவிட 2 டேபிள்ஸ்பூன் ராகியில் பல மடங்கு கால்சியம் இருக்கிறது. அவர்களுக்கு நீங்கள் ராகியில் கூழ் செய்துகொடுக்கலாம். களி செய்து கொடுக்கலாம்.   அதே போல, பிறந்த குழந்தைகளுக்கு 6 மாதங்களுக்குப் பிறகு, திட உணவு அறிமுகப்படுத்தும்போது, ராகியைத்தான் பரிந்துரைப்பார்கள்.

தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் ராகி மாவு 2 ஸ்பூன் போட்டு கலக்கினால் கூழ் மாதிரி ஆகிவிடும். அதில், மிகவும் குறைவாக உப்பு, அல்லது நாட்டுச் சர்க்கரை போட்டு கொடுக்கலாம்.

அதே மாதிரி ராகி மால்ட் ரொம்ப ஃபேமஸ். ராகி மால்ட் செய்வது எப்படி என்றால், தண்ணீரில் 2 டேபிள்ஸ்பூன் ராகி மாவு போட்டு நன்றாகக் கலக்கிவிட வேண்டும். அதைக் கொதிக்க வைத்து கலக்கிக்கொண்டே வந்தால், நன்றாகக் கொதித்து வரும்போது நாட்டுச்சர்க்கரையோ அல்லது உப்பு போட்டோ குடிக்கலாம். மிளகு கூட சேர்த்து சாப்பிடலாம்.

ராகி சாப்பிட்டால், எலும்புகளின் அடர்த்தி அதிகரிக்கும். ராகியில் கால்சியம், புரோட்டின் எல்லாமே கிடைக்கிறது. அதனால், ராகியை நாம் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று ஊட்டச்சத்து நிபுணர் அனுசியா கூறுகிறார்.

நம்ம தாய்மார்கள் பலருக்கும் தாய்ப்பால் சுரக்கவில்லை, இதுதான் முக்கிய பிரச்னையாக இருக்கிறது. அவர்களுக்கு மீன், முட்டை கொடுங்கள், பூண்டு சேர்த்துக்கொள்ளுங்கள் என்பார்கள். இது எல்லாவற்றையும் கொடுக்கலாம். அதே நேரத்தில் அரிசி சாதம் சாப்பிடலாம். அதற்கு பதிலாக, ராகி கூழ், ராகி களி செய்து கொடுக்கலாம். ராகி தோசை செய்து கொடுக்கலாம். ராகி தோசை எப்படி செய்வது என்றால், ராகி மாவில் ரவை போட்டு, தயிர் சேர்த்து நல்லா ருசியாகவும் செய்யலாம். இப்படி செய்து கொடுத்தால் பாலூட்டும் தாய்மார்களுக்கு நன்றாக பால் சுரக்கும். நல்ல எனர்ஜியும் கிடைக்கும். பாலூட்டும் தாய்மார்கள், நீர்ச்சத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால், அவர்களுடைய ரத்தம்தான் பாலாக மாறுகிறது இல்லையா. அவர்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அரிசி சாதம் மூலம் நார்மல் கார்போஹைட்ரேட் கொடுப்பத்ற்கு பதிலாக இந்த மாதிரி ராகியில் செய்து கொடுத்தால் அவர்கள் நல்ல எனர்ஜியாக இருப்பார்கள். நன்றாக பால் சுரக்கும்” என்று ஊட்டச்சத்து நிபுணர் அனுசியா கூறுகிறார். 


 

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: