Advertisment

மலச்சிக்கலுக்கு மட்டுமில்லங்க: ஆஸ்டியோபோரோசிஸ், இதய நோய்யை தடுக்கும் திராட்சை: இதை நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்

திராட்சை தனித்துவமான மணத்தை நமக்கு தருகிறது. மேலும் இதில் அதிக ஆரோக்கியமான நன்மைகள் உள்ளது. இதில் நார்சத்து, ஆண்டி ஆக்ஸிடண்ட், வைட்டமின்ஸ் உள்ளது.

author-image
WebDesk
New Update
ஆஸ்டியோபோரோசிஸ், இதய நோய்யை தடுக்கும் திராட்சை

ஆஸ்டியோபோரோசிஸ், இதய நோய்யை தடுக்கும் திராட்சை

திராட்சை தனித்துவமான மணத்தை நமக்கு தருகிறது. மேலும் இதில் அதிக ஆரோக்கியமான நன்மைகள் உள்ளது. இதில் நார்சத்து, ஆண்டி ஆக்ஸிடண்ட், வைட்டமின்ஸ் உள்ளது. இது ஜீரணத்திற்கு உதவுதாக கூறப்படுகிறது. இதனால் இதய ஆரோக்கியத்தை அதிகப்படுத்த முடியும்.  இரும்பு சத்து அளவை அதிகரிக்கும், எலும்பு வலுப்பெற உதவும். சீரான ரத்த அழுத்தத்தை வைத்திருக்கும்.

Advertisment

இந்நிலையில் 100 கிராம் திராட்சையில் இருக்கும் சத்துக்களை தெரிந்துகொள்வோம்.

கலோரிகள்: 299 கலோரிகள், கார்போஹைட்ரேட்: 79.2 கிராம், நார்சத்து: 3.7 கிராம், புரத சத்து: 3.1 கிராம்,  கொழுப்பு சத்து: 0. 5 கிராம், வைட்டமின் சி: 2.3 மில்லிகிராம், வைட்டமின் கே: 3.5 மில்லிகிராம், வைட்டமின் பி1: 0.1 மில்லிகிராம், வைட்டமின் பி2 ரிபோபிளாவின்: 0.1 மில்லி கிராம்ஸ், வைட்டமின் பி3: 0.8 மில்லிகிராம், வைட்டமின் பி6: 0.2 மில்லிகிராம், டைட்டமின் பி9 ( போலேட்) : 5 மில்லிகிராம்ஸ், பொட்டாஷியம்: 749 மில்லிகிராம், கால்சியம்: 50 மில்லிகிராம், இரும்பு சத்து: 1.9 மில்லிகிராம், மெக்னீஷியம்: 32 மில்லிகிராம், பாஸ்பரஸ்: 101 மில்லிகிராம், சிங்க்: 0.2 மில்லிகிராம்.

திராட்ச்சையை  பொருத்தவரை சர்க்கரை நோயாளிகள் பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் நார்சத்து, ஆண்டி ஆக்ஸிடண்ட், மினரல்ஸ், பொட்டாஷியம், இரும்பு சத்து இருக்கிறது.

இதில் இருக்கும் நார்சத்து ஜீரணத்திற்கு உதவுகிறது. மேலும் மலச்சிக்கலை போக்குகிறது.

இதில் பினாலிக் கெமிக்கல்ஸ், இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும். மேலும் இதயம் மற்றும் ரத்த குழாய்கள் சமந்தமான நோய்கள் தடுக்கும்.

இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட், செல்கள் சேதமடைவதை தடுக்கிறது. இதில் இருக்கும் கால்சியம், போரோன் எலும்பை வலுவாக்குகிறது. மேலும் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படும் சாத்தியங்களை குறைக்கிறது.

இந்நிலையில் இதில் உள்ள அதிக கிளைசிமிக் இண்டக்ஸ், ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் பார்த்து சாப்பிட வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment