scorecardresearch

புரதம் முதல் ஃபைபர் வரை… ஒரு கப் கிரேப்சில் வியக்க வைக்கும் சத்துகள்!

15 கிராம் மட்டுமே கார்போஹைட்ரேட் அளவு கொண்ட பழத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவின் சர்க்கரை நோய் அமைப்பு தெரிவித்துள்ளது. அதாவது அரை கப் கிரேப்ஸ் என்ற அளவில் சாப்பிடலாம்.

ஒரு கப் கிரேப்ஸில் வியக்கவைக்கும் சத்துக்கள்
ஒரு கப் கிரேப்ஸில் வியக்கவைக்கும் சத்துக்கள்

இனிப்பு நிறைந்த கிரேப்ஸ், நாம் சாப்பிடலாமா என்ற கேள்வி எப்போதும் எழும். இந்நிலையில் இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. மேலும் இதில் வீக்கத்திற்கு எதிரான பண்புகள், புற்றுநோய்யை கூட எதிர்க்கும் பண்புகள் உள்ளது.

மேலும் இது இதய நோய்களை கூட ஏற்படாமல் தடுக்கும். மேலும் இதில் பாலிபினால்ஸ் இருப்பதால், இது வீக்கத்திற்கு எதிராவும், புற்று நோய்யை தடுக்கும் ஆற்றல் கொண்டது.

இதய ரத்த குழாய்களை பாதிக்கும், நோய்களை அது தடுக்கிறது. இதனால் இதய ரத்த குழாய்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும். மேலும் மூளை செயல்பாடுகளை ஊக்குவிக்கும். கூடுதலாக ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கும்.

ஒரு கப் கிரேப்சில்  அதாவது 151 கிராம் கிரேப்சில் இருக்கும் சத்துக்கள். 104 கலோரிகள், 27.3 கிராம் கார்போஹைட்ரேட், 1 கிராம் புரத சத்து, 1. 4 கிராம் நார்சத்து, 0.2 கிராம் கொழுப்பு சத்து, வைட்டமின் சி 16.3% ( தினமும் தேவைப்படும் அளவு) , வைட்டமின் கே  18.6%, தைமின் 6.2%, ரிபோ பிளாவின் 4.8%, வைட்டமின் பி6  5.6%, பொட்டாஷியம் 8.6%  , காப்பர் 4% உள்ளது.

சர்க்கரை நோயாளிகள் கிராப்ஸ் சாப்பிடுவதை கைவிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் அளவு மிகவும் முக்கியம். இது ரத்த குளுக்கோஸை அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்நிலையில் ஒரு நேரத்தில், 15 கிராம்  மட்டுமே கார்போஹைட்ரேட் அளவு கொண்ட பழத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவின்  சர்க்கரை நோய் அமைப்பு தெரிவித்துள்ளது. அதாவது அரை கப் கிரேப்ஸ் என்ற அளவில் சாப்பிடலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Nutrition alert one cup 151 grams of grapes contain

Best of Express