scorecardresearch

மாம்பழம் சாப்பிட்டால் வெயிட் போடுமா? மாம்பழத்தில் இருக்கும் சத்துக்கள் என்ன?

மாம்பழங்களில் நாம் நினைத்து பார்ப்பதை விட அதிக நன்மைகள் இருக்கிறது. நாம் ஆரஞ்சு பழத்தோடு மாம்பழங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், மாம்பழத்தில் வைட்டமின் சி, ஏ, இ, கே மற்றும் போலேட் இருக்கிறது. ஆரஞ்சில் இருக்கும் சத்தைவிட இது அதிகம்.

மாம்பழம்
மாம்பழம்

மாம்பழங்களில் நாம் நினைத்து பார்ப்பதை விட அதிக நன்மைகள் இருக்கிறது. நாம் ஆரஞ்சு பழத்தோடு மாம்பழங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், மாம்பழத்தில் வைட்டமின் சி, ஏ, இ, கே மற்றும் போலேட் இருக்கிறது. ஆரஞ்சில் இருக்கும் சத்தைவிட இது அதிகம்.

இதில் வைட்டமின் சி மற்றும் ஏ மற்றும் நார்சத்து இருக்கிறது. மேலும் இதில் மெக்னீஷியம், போலேட் இருக்கிறது. மாம்பழத்தில் ஜீரணத்தை தூண்டும் என்சைம் இருக்கிறது. இந்த என்சைம் புரத சத்தை உடைத்து, ஜீரணத்திற்கு உதவுகிறது.

மாம்பழத்தில் ஆண்டி ஆக்ஸிடண்ட், பீட்டா கரோட்டீன் , வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். இதில் இருக்கும் அதிக நார்சத்து, கொலஸ்ட்ராலை குறைக்கும்  மேலும் இதய நோய் வராமல் தடுக்கும்.

கொலஜன் உற்பத்தியை அதிகரிப்பதால், சருமத்தின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. 165 கிராம் நறுக்கிய மாம்பழத்தில் 99 கலோரிகள், 25 கிராம் கார்போஹைட்ரேட்,  நார்சத்து 3 கிராம்,  புரசத சத்து ஒரு கிராம்,  கொழுப்பு சத்து 0.5 கிராம் இருக்கிறது.

மேலும் மாப்ழம் சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும் என்று கூறப்படுவதிலும் உண்மையில்லை. மேலும் மாம்பழத்தில் குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ் இருக்கிறது.

இதில் அதிக தண்ணீர் சத்து இருப்பதால், நமது ஜீரணத்திற்கு உதவுகிறது. மேலும் இதில் மிக குறைந்த அளவில் கொழுப்பு சத்து இருப்பதால் இது கொலஸ்ட்ரால் ஏற்படுத்தாது.   மேலும் மாம்பழங்கள் சாப்பிட்டால், முகப்பரு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இதற்கு எந்த அறிவியல் பூர்வமான ஆய்வுகளும் இல்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Nutrition alert one cup 165 grams of diced mango contains

Best of Express