நீங்கள் நிச்சயம் லீச்சஸ் பழங்களை சாப்பிட்டிருப்பிர்கள். குறிப்பாக கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு இது எளிதாகவே கிடைக்கும். நமக்கு சீசன் நேரத்தில்தான் லீச்சஸ் பழங்கள் கிடைக்கும். இந்நிலையில் லீச்சஸ் பழங்கள் வெறும் இனிப்பு சுவைதான் இருப்பதாக நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம்.
ஆனால் இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் அதிகம் இருப்பதால், சருமத்தின் ஆரோக்கியத்திற்கு உதவும். மேலும் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.
இந்நிலையில் 190 கிராம் அல்லது ஒரு கப் லீச்சஸ் பழத்தில், 125 கலோரிகள் உள்ளது. 1.6 கிராம் புரத சத்து, 0.5 கிராம் கொழுப்பு சத்து , 31.6 கிராம் கார்போஹைட்ரேட், 2.5 கிராம் நார்சத்து , 29.3 கிராம் இனிப்பு சத்து உள்ளது.
மேலும் இதில் வைட்டமின் சி, காப்பர், பொட்டாஷியம் இருக்கிறது. மேலும் இதில் பாலிபெனோலிக் (polyphenolic compounds) வேதிப் பொருள் இருக்கிறது. இவை ஆண்டி ஆக்ஸிடண்டாக செயலாற்றி, உடலை பாதிப்பில் இருந்து மீட்கிறது.
இதில் இருக்கும் வைட்டமின் சி, இது கொலஜன் உற்பத்தியை ஊக்கப்படுத்தும் என்பதால், இதனால் சருமம் இளமையாக இருக்கும்.
நிச்சயம், சுகர் அதிகம் உள்ளவர்கள், லீச்சஸ் பழத்தை பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்நிலையில் லீச்சஸ் பழங்களை எடுத்துக்கொள்ளும் போதும் கவனமாக இருக்க வேண்டும்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil