கிவி பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. இது இதய ஆரோக்கியத்திற்கு, குடல் ஆரோக்கியத்திற்கு, கண் ஆரோக்கியத்திற்கும் நல்லது. உதன் கிளைசிமிக் இண்டக்ஸ் சிறிது குறைவு. குறைந்த கலோரிகளை கொண்டது.
ஒரு கிவி பழம் அல்லது 69 கிராம் பழத்தில் எவ்வளவு சத்துகள் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வோம். கார்போஹைட்ரேட்: 10 கிராம், கலோரிகள்:42, புரத சத்து: 1 கிராம், நார்சத்து : 2 கிராம், கொழுப்பு சத்து: 0, வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் இ, பொட்டாஷியம், போலேட், மேலும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6, காப்பர், மெக்னீஷியம் உள்ளது.
இதில் இருக்கும் வைட்டமின் சி, நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பொதுவாக வரும் நோய் தொற்று ஏற்படாமல் பார்த்துகொள்ளும்.
இதில் இருக்கும் டயட்டரி நார்சத்து, ஜீரணத்திற்கும் உதவி, வயிற்றின் செயல்பாடுகளை சீராக்கும். கிவி பழத்தில் உள்ள, ஆக்டினிடின் ( actinidin), புரத சத்தை ஜீரணிக்க உதவுகிறது.
கிவியில், பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது. இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இந்த நார்சத்து ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவை பாதுகாக்க உதவுகிறது.
இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட், வைட்டமின் சி, வைட்டமின் இ, நமது செல்களை சேதமடையாமல் பார்த்துகொள்ளும்.
மேலும் இதில் இருக்கும் லூடீன் மற்றும் சியாக்ஸ்சயத்தின் கண்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. வயதானதால் ஏற்படும் கண் பிரச்சனைகளை கட்டுபடுத்த உதவுகிறது.
இதில் இனிப்பு தன்மை இருப்பதால், ரத்த சர்க்கரை அளவை சற்று அதிகரிக்கலாம் என்பதால் ஒட்டுமொத்தமாக நீங்கள் எடுத்துகொள்ளும் கார்போஹைட்ரேட் அளவை கவனத்தில் கொண்டு நீங்கள் இதை எடுத்துகொள்ள வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“