இந்த பழத்தை இனி ஒதுக்காதீங்க: இதய ஆரோக்கியம் முதல் பார்வைத்திறன் வரை: ஹெல்தியா உங்கள வச்சுக்கும்

இதய ஆரோக்கியம் மற்றும் கண்களுக்கு நல்லது. சர்க்கரை நோயாளிகள் இதை அளவாக எடுத்துக்கொள்ளலாம்.

இதய ஆரோக்கியம் மற்றும் கண்களுக்கு நல்லது. சர்க்கரை நோயாளிகள் இதை அளவாக எடுத்துக்கொள்ளலாம்.

author-image
WebDesk
New Update
இந்த பழத்தை இனி ஒதுக்காதீங்க

இந்த பழத்தை இனி ஒதுக்காதீங்க

கிரிணிப் பழம், இனிப்பு மற்றும் சாறுடன் இருக்கும். இதை சாப்பிட்டால் ஜீரணத்திற்கு நல்லது, இதய ஆரோக்கியம் மற்றும் கண்களுக்கு நல்லது. சர்க்கரை நோயாளிகள் இதை அளவாக எடுத்துக்கொள்ளலாம். மத்திய ஆசியாவில், வெயில் காலத்தில் கிடைக்கும்.

Advertisment

இந்நிலையில் கிரிணிப்பழத்தில் இருக்கும் சத்துக்கள் அதன் அளவு மற்றும் எடை பொறுத்து மாறுபடும்.  5 கப் அதாவது 552 கிராம் கிரிணிப்பழத்தில் இருக்கும் சத்துக்கள்.

கலோரிகள் – 188

கார்போஹைட்ரேட்- 45 கிராம்

Advertisment
Advertisements

நார்சத்து- 5 கிராம்

புரத சத்து- 5 கிராம்

கொழுப்பு சத்து – 1 கிராம்

வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாஷியம், போலேட் உள்ளது.

இந்நிலையில் கிரிணிப்பழத்தில் அதிக தண்ணீர் சத்து இருப்பதால், வெயில் காலத்தில் உடல் வறட்சி அடையாமல் இருக்கும் .

இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆன வைட்டமின் சி, பீட்டா கரோட்டீன், இது உடலை பாதிப்பிலிருந்து காபாற்றி, மோசமான நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

இதில் இருக்கும் வைட்டமின் ஏ, நமது பார்வையை ஆரோக்கியமாக்குகிறது. மேலும் வயதாவதால் ஏற்படும் பார்வை குறைபாடு, கண்புரை நோய் வராமல் தடுக்கிறது. இதில் இருக்கும் பொட்டாஷியம் உடலை ஆரோக்கியமாக வைத்து, ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. இதய ரத்த குழாய்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.

இதில் இருக்கும் நார்சத்து, ஜீரணத்திற்கு உதவுகிறது. வயிறு தொடர்பான செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது. மலச்சிக்கலை தடுக்கிறது.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை சற்று அதிகமாகவே சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் ஒரு கப் அல்லது 120 கிராம் அளவில் எடுத்துக்கொள்வது சரியாக இருக்கும். இதன் கிளைசிமிக் இண்டக்ஸ் 65 என்பதால், அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும் .

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: