scorecardresearch

புரத சத்து, நார்சத்து  நிறைந்த தர்பூசணி: சுகர் பேஷண்ட்ஸ் சாப்பிடலாமா?

தர்பூசணி வெயில் காலத்திற்கு புத்தணர்வாக இருக்கும் என்பது மட்டுமே நமக்கு தெரியும். ஆனால் இதில் பல் சத்துக்கள் மறைந்து இருக்கிறது. இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.

புரத சத்து, நார்சத்து நிறைந்த தர்பூசணி
புரத சத்து, நார்சத்து நிறைந்த தர்பூசணி

தர்பூசணி வெயில் காலத்திற்கு புத்தணர்வாக இருக்கும் என்பது மட்டுமே நமக்கு தெரியும். ஆனால் இதில் பல் சத்துக்கள் மறைந்து இருக்கிறது. இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும் நமது நோய் எதிர்ப்பு சக்திக்கு நல்லது. ஜீரணத்தை ஊக்கப்படுத்தி, உடல் எடை குறைக்க உதவுகிறது.

உடல் பயிற்சி செய்வதற்கு பிறகு நாம் எடுத்துக்கொள்ளும் உணவாக தர்பூசணி இருக்க வேண்டும். உடல் பயிற்சி செய்து முடித்த பின்பு ஏற்படும் வலியை இது நீக்க உதவும்.

குறிப்பாக ஒரு தர்பூசணியில் அதாவது 6,8 கிலோ தர்பூசணியில் இருக்கும் சத்துக்களை பார்க்கலாம்.

கலோரிகள்- 1,200

கார்போஹைட்ரேட்- 300 கிராம்

புரோட்டீன் – 30 கிராம்

நார்சத்து- 12 கிராம்

கொழுப்பு சத்து-0

மேலும் இதில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாஷியம், லைக்கோபென்னே இருக்கிறது.

இதில் இருக்கும் தண்ணீர் சத்து குளுமையான தாக்கத்தை கொடுக்கும். இந்நிலையில் வரட்சியை ஏற்படுத்தாது. இதில் இருக்கும் எலக்ட்ரோலைட் பொட்டாஷியம், மெக்னிஷியம் உள்ளிட்டவை, நமது உடலில் இருக்கும் திரவ அளவை, நரம்பு செயல்பாட்டை, தசைகள் சுருங்கி விரிவதை பார்த்துக் கொள்கிறது.

இதில் இருக்கும் நார்சத்து, ஜீரணத்தை ஊக்கப்படுத்தி மலச்சிக்கலை தவிர்க்கும். இதில் இருக்கும் வைட்டமின் ஏ சத்து, ஆரோக்கியமான பார்வைத்திறனை நீட்டிக்க உதவுகிறது. பொலிவான சருமத்தை கொடுக்க உதவுகிறது.

இதில் இருக்கும்  குகுர்பிடசின் இ மற்றும் லைக்கோ பென்னே வீக்கத்தை போக்கி, ஆர்த்ரைடிஸ் நோய்யின் தாக்கத்தை குறைக்கிறது.

சர்க்கரை நோயாளிகள் 150 கிராம் தர்பூசணி பழங்களை சாப்பிடலாம். இதில் 7 கிராம் கார்போஹைட்ரேட் மட்டுமே  உள்ளது. நன்றாக பழுத்த, கனமான பழத்தை மட்டுமே நாம் வாங்க வேண்டும். இதில் அதிக கிளைசிமிக் இண்டக்ஸ் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் அதிக அளவில் சாப்பிட்டல் ரத்த சர்க்கரை அதிகரிக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Nutrition alert one watermelon