3 முக்கிய பிரச்சனைக்கு ஸ்டாபெரி சாப்பிடலாம்: சுகர் பேஷண்ட்ஸ் இந்த அளவுதான் எடுத்துக்கணும்

ஸ்டாபெரியில் குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ் இருப்பதால், இதை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். குறிப்பாக 1 ¼ கப் அளவில் சாப்பிடலாம்.

ஸ்டாபெரியில் குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ் இருப்பதால், இதை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். குறிப்பாக 1 ¼ கப் அளவில் சாப்பிடலாம்.

author-image
WebDesk
New Update
ஸ்டாபெரி

ஸ்டாபெரி

ஸ்டாபெரி பழம் எப்போதுமே அதன் ஜாம், கேக் மற்றும் ஐஸ்க்ரீமில் இனிப்பு சேர்க்கப்பட்டதைதான் நாம் சாப்பிடுவோம். இந்நிலையில் இதுபோல அல்லாமல் இயற்கையான நிலையில் நாம் ஸ்டாபெரி பழங்களை சாப்பிடலாம்.

Advertisment

குறிப்பாக ஸ்டாபெரி இதயத்தை பாதுகாக்கிறது, ரத்த சர்க்கரையை சீராக்குகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, ரத்த அழுத்த அளவை சீராக்குகிறது, குறிப்பாக மூளையின் செய்லபாடுகளை ஊக்குவிக்கிறது . இந்நிலையில் ஸ்டாபெரியில் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இதில் டயட்டரி நார்சத்து மற்றும் குறைந்த கலோரிகளை கொண்டது. குறைந்த கொழுப்பு சத்து உள்ளது.

இந்நிலையில் ஸ்டாபெரியில் வைட்டமின் சி இருக்கிறது. இது நமது நோய் எதிர்ப்பு சக்திக்கு உறுதுணையாக இருக்கிறது. கொலஜன் உற்பத்தியில் உதவுகிறது. இதனால் ஆரோக்கியமான சருமம் கிடைக்கும். மேலும் உடலை பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது.

இதில் இருக்கும் முக்கிய சத்துக்கள் இதயம் மற்றும் தசைகள் இயக்கத்திற்கு உதவுகிறது. போலேட், இதை வைட்டமின் பி9 என்று அழைப்பார்கள். இந்த சத்து ஸ்டாபெரியில் இருக்கும்.  இந்நிலையில் டி.என்.ஏவின் செயலாக்கத்தில் பங்கு வகிக்கிறது.

Advertisment
Advertisements

100 கிராம் ஸ்டாபெரியில் இருக்கும் சத்துக்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.

கலோரிகள் : 32, தண்ணீர்: 91%, புரத சத்து: 07 கிராம், கார்போஹைட்ரேட்: 7.7 கிராம்,  சர்க்கரை: 4.9 கிராம், நார்சத்து: 2 கிராம், சர்க்கரை : 4.9 கிராம், கொழுப்பு சத்து: 0.3 கிராம்,  வைட்டமின் சி, கால்சியம், இரும்பு சத்து, பொட்டாஷியம் .

இதில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட் மூளையின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகிறது. மேலும் வயதாகும்போது, மூளையின் செயல்பாடுகளில் ஏற்படும் சிக்கலை குறைக்க உதவுகிறது.

இதில் இருக்கும் பிளாப்போய்ட்ஸ் கண் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.  கண் புறை நோய் வராமல் தடுக்கும்.

இதில் இருக்கும் நார்சத்து ஜீரண சக்தியை அதிகரித்து, மலச்சிக்கலை தவிர்க்கும். மேலும் குடலில் உள்ள பேக்டீரியாவின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

ஸ்டாபெரியில் குறைந்த கிளைசிமிக் இண்டக்ஸ் இருப்பதால், இதை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். குறிப்பாக 1 ¼ கப் அளவில் சாப்பிடலாம்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: