சத்தான ஓட்ஸ் பான்கேக் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
ஓட்ஸ் - 1 கப்
கோதுமை மாவு - அரை கப்
மோர் - அரை கப்
முட்டை - 1
வெங்காயம் - 1
கேரட் - 2-3
குடைமிளகாய் - 1
பேக்கிங் பவுடர் - 1 ஸ்பூன்
பேக்கிங் சோடா - அரை ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
சீரக தூள் - அரை ஸ்பூன்
மிளகாய் - இரண்டு
எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
ஓட்ஸை தண்ணீரில் பத்து நிமிடம் ஊற வைக்கவும். பின் மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைக்கவும். இந்த ஓட்ஸ் மாவை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைக்கவும்.
அதில் சீரக தூள், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் கோதுமை மாவு ஆகியவற்றை சேர்க்கவும். மற்றொரு பாத்திரத்தில் மோர், முட்டை மற்றும் நறுக்கிய வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
இதை கலக்கிய பிறகு, ஓட்ஸின் கலவையில் சேர்க்க வேண்டும். பிறகு நறுக்கிய கேரட், குடைமிளகாய், தேவைக்கேற்ற உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். தேவைப்பட்டால் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கொள்ளலாம். இப்போது இந்த மாவை எப்போதும் போல் தோசைக் கல் வைத்து தோசை ஊற்றுவது போல் சற்று மொத்தமாக ஊற்றி எடுத்தால் சத்தான ஓட்ஸ் பான் கேக் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“