நாம் சிறுவயதாக இருக்கும்போது, காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவார்கள். இந்நிலையில் இது உண்மையாகவே பயனுள்ளதா? இல்லை கட்டுகதையா? என்பதை தெரிந்துகொள்வோம்.
காப்பர் சத்து நிறைந்த உணவுகளான, நட்ஸ், விதைகள், உருளைக்கிழங்கு, டார்க் சாக்லேட் மற்றும் மாமிசம் சாப்பிடும்போது, மூளையின் வளர்ச்சி அதிகரிக்கிறது. மேலும் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

இந்நிலையில் காப்பர் பாத்திரத்தில் 48 மணி நேரம் தண்ணீர் நிரப்பி குடித்தால் தண்ணீரில் உள்ள பேக்டிரியாக்கள் நீங்கும். மேலும் காப்பர் ஜீரணத்தை அதிகப்படுத்துகிறது. இதனால் மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி ஏற்படமால் பார்த்துக்கொள்கிறது.மேலும் இதில் இருக்கும் வீக்கத்திற்கு எதிரான தன்மை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. காப்பரில் சேமிக்கப்படும் தண்ணிர் அல்கலின்னாக (alkaline ) இருக்கும். இதனால் நமது உடலுக்கு குளிர்ச்சி தருகிறது.
ஆயுர்வேத மருத்துவ முறையிலும் காப்பர் பயன்பாடு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. வெயில் காலங்களில் காப்பர் பாத்திரத்தில் சேமித்த நீரை குடிப்பது மிகவும் நல்லது.
மேலும் அதிகாலையில், வெறும் வயிற்றில் காப்பர் பாத்திரத்தில் சேமித்த தண்ணீரை குடிக்கலாம். இதுவே சரியான நேரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிகமாக இந்த தண்ணீரை குடிக்க கூடாது. 0.47 எம்ஜி வரை மட்டுமே காப்பர் அளவை ஒருவர் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.