உடலில் ஏற்படும் 17 நோய்களை தீர்க்கும் அருமருந்து (ஓமம்) அதைப்பற்றி விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி டாக்டர்.கௌதமன்.
நம் சமையலறையில் இருக்கக்கூடிய 15 பொருட்கள் இன்றைக்கு உடலில் ஏற்படக்கூடிய நோய்த்தொற்றுக்கள் மட்டுமில்லாமல் உடலில் நோயே வராமல் தடுக்கக்கூடிய சக்திவாய்ந்த மூலிகைகளை நம் தமிழ் சமூகம் மறந்துவிட்டது.
அந்த வகையில் ஓமம் தரும் பயன்கள் என்னென்ன..? ஓமம் எந்தெந்த உடல்நல பிரச்சனைகளுக்கு சிறந்த பயனை தருகிறது..? ஓமத்தை எடுக்கும்போது மேற்கொள்ளவேண்டிய வாழ்வியல் மாற்றங்கள் என்னென்ன..?போன்ற பல்வேறு கேள்விகளுக்கு டாக்டர்.கௌதமன் பதில் அளிக்கிறார்.
ஓமத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், நியாசின் போன்ற பல வகையான சத்துக்கள் நிறைந்துள்ளன.
மூச்சு பிரச்சனை: சிறிய பொருளை எடுத்தாலோ, படிக்கட்டுகள் ஏறி வந்தாலோ அதிக மூச்சு வாங்கும் நிலை ஏற்படும். இது போன்று உள்ளவர்கள் ஓமத்தினை நீரில் கொதிக்கவைத்து இதனுடன் சிறிதளவு கருப்பட்டியை சேர்த்து காலையில் குடித்துவர உடல் நன்கு பலமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
நீரிழிவு நோய்: அரிசியுடன் ஓமம் சாப்பிடுவது நீரிழிவு நோயைத் தடுக்க அல்லது சிகிச்சையளிப்பதில் நன்மை பயக்கும். 100 மில்லி மோரில் 2 டீஸ்பூன் தூள் ஓமம் சேர்த்து நாள் முழுவதும் குடிக்கவும்.
பசியின்மை: பசி மற்றும் தூக்கம் இல்லாமல் பலர் சிரமப்படுவார்கள். நன்கு பசி எடுக்க, வயிறு சம்மந்தமான பிரச்சனைகள், நாம் உண்ட உணவானது செரிமானம் ஆகுவதற்கு ஓமத்தினை கஷாயம் வைத்து குடித்து வரலாம்.
வாயு தொல்லை: ஓமம், சுக்கு, கடுக்காய் பொடி போன்றவற்றை சமமான அளவிற்கு எடுத்துக்கொண்டு பொடி செய்து 1/2 டீஸ்பூன் அளவு எடுத்து 1 டம்ளர் மோருடன் கலந்து குடித்து வந்தால் வாயு தொல்லை நீங்கிவிடும்.
உடலில் ஏற்படும் 17 நோய்களை தீர்க்கும் அருமருந்து (ஓமம்) விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி Dr.கௌதமன் .
வயிற்று உப்புசம்: உடலில் உள்ள உமிழ்நீரை அதிகரிக்கும் ஓமத்தை நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால் அஜீரணம், அதிசாரம், வயிற்று உப்புசம், சீதபேதி போன்ற நோய்கள் குணமடைய செய்யும்.
சளி: சளி, மூக்கடைப்பு குணமாக ஓமத்தினை ஒரு துணியில் கட்டி நுகர்ந்து வர சளி, மூக்கடைப்பு போன்றவை குணமாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி: இந்த மூலிகையை தொடர்ந்து உட்கொள்வது ஆன்டிபாடிகளின் உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
எலும்பு வளர்ச்சி: விரைவான எலும்பு வளர்ச்சியைத் தூண்டுவதற்கு 1-2 மாத்திரைகள் வைட்டமின் D3 உடன் 1 தேக்கரண்டி ஓமம் விதைகளை தினமும் சேர்க்கவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.