ஆம்லெட் மாதிரியும் இருக்கும் இல்லாத மாதிரியும் இருக்கும். அப்படி ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் எப்படி செய்வது என்று குக் வித் மாம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
முட்டை
கடலை மாவு
வெங்காயம்
பச்சை மிளகாய்
கொத்தமல்லி இலை
உப்பு
எண்ணெய்
செய்முறை
ஒரு கப்பில் 3 முட்டை சேர்த்து ஆம்லேட்டுக்கு அடிப்பது போல் கரண்டி வைத்து அடித்துக் கொள்ளவும். அதில் கடலை மாவு சேர்த்து கட்டி இல்லாமல் கரைக்க வேண்டும். பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றையும் சேர்த்து கலந்து கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்தால் அவ்வளவுதான் பக்கோடா போட தேவையான அளவிற்கு முட்டை ரெடியாகிவிடும்.
பின்னர் இதனை ஒரு கரண்டியில் எடுத்து சிறிது சிறிதாக ஊற்றி எண்ணெயில் பொரித்து எடுத்தால் போதும் முட்டை பக்கோடா ரெடியாகிவிடும். இரண்டு பக்கமும் திருப்பி போட்டு சிவக்க விட்டு எடுக்கவும். பின்னர் மேலே சுவைக்காக மிளகுத்தூள் தூவி தக்காளி சாஸ் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.