முட்டை இருக்கா... அப்போ இந்த மாதிரி ஆம்லெட் போடுங்கள்

முட்டை இருந்தா கொஞ்சம் டிப்ரண்டாக ஸ்பானிஷ் ஆம்லெட் ட்ரை பண்ணுங்கள். ரொம்ப ஈஸியா சமைக்க தெரியாதவர்கள் கூட செய்து விடலாம்.

முட்டை இருந்தா கொஞ்சம் டிப்ரண்டாக ஸ்பானிஷ் ஆம்லெட் ட்ரை பண்ணுங்கள். ரொம்ப ஈஸியா சமைக்க தெரியாதவர்கள் கூட செய்து விடலாம்.

author-image
WebDesk
New Update
spanich omelette

முட்டை இருக்கா அப்போ எப்போதும் போல் இல்லாமல் ஈஸியன ஸ்பானிஷ் ஆம்லெட் இப்படி செய்து பாருங்கள். வெறும் முட்டையையே லஞ்ச் மாதிரி சாப்பிடுவார்கள். 

Advertisment

தேவையான பொருட்கள்

முட்டை - 4
வெங்காயம் - 3 நறுக்கியது
உருளைக்கிழங்கு - 4
உப்பு  
மிளகு தூள்  
சில்லி பிளேக்ஸ் 
எண்ணெய்  

செய்முறை

Advertisment
Advertisements

உருளைக்கிழங்கை எடுத்து தோலை உரித்து துண்டுகளாக வெட்டவும். சமைப்பதற்கு முன்பு அதை வெட்டி, தண்ணீரில் போட வேண்டாம்.

ஒரு கடாயில் எண்ணெய் துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கை  சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.  உருளைக்கிழங்கு வதங்கியதும், நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். 3 நிமிடங்கள் வதக்கவும். உப்பு, மிளகு தூள், சில்லி பிளேக்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து, உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கலக்கவும். சமைத்த உருளைக்கிழங்கு, வெங்காயம் கலவையை உடைத்த முட்டையுடன் சேர்த்து நன்கு கலக்கவும். அதை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

ஒரு சிறிய கடாயில் எண்ணெய் சேர்த்து சமமாக பரப்பி கலவையை ஊற்றி அனைத்து பக்கங்களிலும் சமமாக பரப்பவும். ஒவ்வொரு பக்கத்திலும் ஐந்து நிமிடங்கள் சமைக்கவும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு கடாயில் ஒரு தட்டை வைத்து மெதுவாக அதை புரட்டவும்.

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் தடவி மீண்டும் கடாயில் வைக்கவும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு அதை ஒரு தட்டில் மெதுவாக புரட்டவும். சுவையான ஸ்பானிஷ் ஆம்லெட்டை  சூடாக பரிமாறவும்.

Cooking Tips Egg

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: