ஈஸியான ஒன்பாட் ரெசிப்பியான சாம்பார் சாதம் பேச்சுலர்ஸ் கூட ஈசியாக செய்யலாம். ஈசியான சாம்பார் சாதம் ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
குக்கர் எடுத்து வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் கடுகு, சீரகம் சேர்த்து பொறிந்து வந்ததும் அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சிறிது பெருங்காயத்தூள் தக்காளி சேர்த்து ஒரு மூன்று நிமிடம் வதக்கவும்.
இதில் நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, முருங்கைக்காய், கத்தரிக்காய் போன்ற காய்களை சேர்த்து கிளறி மஞ்சள் தூள், உப்பு, சாம்பார் தூள் சேர்த்து கலந்து விடவும்.
ஊற வைத்த பருப்பு அரிசி இரண்டையும் சேர்த்து நன்கு கலந்து விட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி தேவையான விசில் விட்டு குழைய விட்டு இறக்கவும்.
இதனை தாளிப்பதற்காக ஒரு முந்திரி சேர்த்து அதற்கு மேலே கருவேப்பிலையும் சேர்த்து வறுத்து குழைவாக வெந்து வந்த சாதத்தின் மேல் கொட்டி கிளறி பரிமாறலாம். தேவைப்பட்டால் மேலே சிறிது கொத்தமல்லி தழைகளை தூவி கிளறலாம்.