வெந்தயம் சாப்பிட்டு வர பல உடல் நன்மைகள் ஏற்படும்.வெந்தயம் நம் வீடுகளிலும் இருக்கும் ஒரு முக்கிய தானிய உணவு பொருள் ஆகும். நம் அன்றாட உணவில் வெந்தயம் சாப்பிடுவது பல உடல் நன்மைகளை தரும்.
வெந்தயம் கசப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இது, குளிர்ச்சியை உண்டாக்கும், காய்ச்சல், வெள்ளைபடுதல், உடல் எரிச்சல், இளைப்பு நோய் ஆகியவற்றைக் குணமாக்கும். மேலும் மலச்சிக்கல், கல்லீரல் நோய்கள், வயிற்று உப்புசம், மந்தம், குடல்வாயு போன்றவற்றையும் குணமாக்கும்.
அவர் பேசுகையில், வெந்தயத்தை அரைத்து பொடி செய்து பாட்டிலில் வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் அரை ஸ்பூன் சாப்பிட வேண்டும். இருக்கிற தானியங்களில் ஆகச் சிறந்தது வெந்தயம். வெந்தயத்தில் கரையும் நாரும் உள்ளது கரையாததும் உள்ளது. சாலிபில் ஃபைபர், இன்சாலிபில் ஃபைபர் உள்ளது.
சாலிபில் ஃபைபர் மாரடைப்பு வராமல் தடுக்கிறது. இன்சாலிபில் ஃபைபர் மலச்சிக்கலை சரி செய்ய வழிவகுக்கிறது. ஹீட் உடம்பு உள்ளவர்கள் வெந்தயத்தை நீரில் போட்டு குடித்து வரலாம். கொழும்பு குறைக்க விரும்புபவர்கள் நேரடியாக பொடி செய்து சாப்பிடுவது சிறந்தது என்று கூறினார்.
தினமும் வெந்தயம் 10 கிராம் எடுத்துக் கொண்டால் உடலுக்கு கசப்பும் கிடைக்கும். மலமும் வெளியேறும். ஆரம்ப காலங்களில் வெந்தயம் மனமூட்டி என்றுதான் நினைத்தார்கள் பின்னர் அது நார்ச்சத்து அதிகம் உள்ளது அதை பயன்படுத்தலாம் என்று அப்படியே அதன் மருத்துவ குணங்கள் பெருக்கிக் கொண்டு போனது.
இது மாதிரி பல சத்துக்கள் உள்ளதால் வெந்தயம் அற்புதமான ஒன்று. உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதற்கும் ஈரல் மேல்படிந்துள்ள கொழுப்பை கரைப்பதற்கும் வெந்தயம் பயன்படும். வெந்தயத்தின் கரையும் நார்கள் இந்த கொழுப்பை கரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வெந்தயத்தை ஊற வைத்து தான் சாப்பிட வேண்டும் என்று அவசியம் கிடையாது.
வெந்தயத்தின் சத்து முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால் அது அப்படியே சமைத்து சாப்பிட வேண்டும். இல்லை என்றால் அதை வறுத்து பொடியாக்கி வைத்துக் கொண்டு அப்படியே காலையிலும் மாலையிலும் ஒவ்வொரு ஸ்பூன் சாப்பிட்டால் மட்டும்தான் முழு சத்து கிடைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கும் கொழுப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்களுக்கும் வெந்தயம் சிறந்த மருந்தாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“