உடலில் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாவதால் மூச்சுப் பிரச்சினைகள், ஆஸ்துமா, சளித் தொல்லைஈ நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வருகின்றன. இதற்கு சின்ன வெங்காயம் மிகச்சிறந்த தீர்வாக உள்ளது.
மருத்துவ குணம் மிகுந்து காணப்படும் காய்கறி வகைகளில் சின்ன வெங்காயத்திற்கு தனி இடம் உண்டு. இவை நம்முடைய அன்றாட சமையல் முதல் மூலிகை மருந்துகள் தயார் செய்வது வரை முக்கிய பொருளாக வலம் வருகிறது. இவற்றை நம்முடைய அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் வலிமை பெறுகிறது. மேலும், பருவ கால நோய்த்தொற்றுக்களில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் உதவுகிறது.
Advertisment
சின்ன வெங்காயம் உடலுக்கு பல அற்புத நன்மைகளை அள்ளித்தருகிறது. குறிப்பாக இது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. உடலில் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாவதால் மூச்சுப் பிரச்சினைகள், ஆஸ்துமா, சளித் தொல்லைஈ நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வருகின்றன. இதற்கு சின்ன வெங்காயம் மிகச்சிறந்த தீர்வாக உள்ளது.
இது போன்ற பிரச்சினைகள் இருக்கும் மக்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயத்தைச் சாப்பிட்டு வரலாம். இது உடலில்ன் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க உதவுகிறது. இப்படி ஏராளமான நன்மைகளை கொண்டுள்ள வெங்காயத்தில் எப்படி சிம்பிளான சட்னி தயார் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம். இதற்கான டிப்ஸை செஃப் வெங்கடேஷ் பட் வழங்கி இருக்கிறார்.
தேவையான பொருட்கள்
தேங்காய் வெல்லம் வர மிளகாய் பெரிய வெங்காயம் அல்லது சின்ன வெங்காயம் புளி
நீங்கள் செய்ய வேண்டியவை
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு, ஒரு கடாய் எடுத்து அதில் எண்ணெய் சூடேற்றவும். பிறகு அதில், வர மிளகாய், கடுகு மற்றும் உளுந்து, கருவேப்பிலை போட்டு தாளிப்பு தயார் செய்து கொள்ளவும். அவற்றை ஏற்கனவே அரைத்து வைத்துள்ள சட்னியுடன் சேர்த்தால், இனிப்பு, புளிப்பு, காரம், வெங்காயம் மணக்கும் இருக்கும் வெங்காயம் சட்னி ரெடி.